முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலகின் மிகப் பெரிய விமானம் இங்கிலாந்தில் தயாரிப்பு

சனிக்கிழமை, 1 மார்ச் 2014      உலகம்
Image Unavailable

 

லண்டன், மார்ச் 2 - இங்கிலாந்தில் ரூ.300 கோடி செலவில்  300 அடி நீள விமானம் அதி நவீன ராட்சத விமானம் தயாரிக்கப்பட்டுள்ளது.  இது ஹெலிகாப்டர், கப்பல், விமானம் ஆகிய முப்பரிமாண பயன்பாட்டுக்குரியது.

இந்த விமானம் 300 அடி அதாவது 90 மீட்டர் நீளம் உடையது. 196 அடி அகலமும், 115 அடி உயரத்துடன் ராட்சத உருவம் கொண்டதாக இது வடிவமைக்கப் பட்டுள்ளது. இதில்  ஒரே நேரத்தில் 50 டன் எடையுள்ள  சரக்குகளை ஏற்றிச் செல்ல முடியும். இதில் மேலும் 50 பேரும் பயணம் செய்யலாம்.

 இதில் ஒரு தடவை பெட்ரோல் நிரப்பினால் போதும். 3 வாரங்கள் இந்த விமானம் பறக்கும். இதற்கு ஓடுதளம் தேவையி்ல்லை. ஹெலிகாப்டர் போன்று அப்படியே  விண்ணில் மேலேறி பறக்கும். மேலும் தண்ணீரிலும் தரை இறங்கி கப்பல் போல் மிதக்கும் வசதியும் இதில் உள்ளது. இந்த விமானம் பெட்போர்ட்ஷர் நகரில் 100 ஆண்டு பாரம்பரியம் மிக்க காரிங்டன் நிறுவனத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டது.

அப்போது அது லண்டனில் மிகவும் பிரசித்திபெற்ற பிக்பென் கடிகார கோபுரத்தை விட பெரியதாக காட்சி அளித்தது.  இந்த விமானம் தயாரிப்புக் காக  இங்கிலாந்து அரசு இந்த நிறுவனத்துக்கு ரூ.25 கோடி மானியம் வழங்கி இருந்தது. இதற்கு முன்பு  ரஷ்யாவின் ஆன்டோனேங் ஏ என் -225 விமானம் உலகின் மிகப்பெரிய நீளமான விமானம் என்ற பெருமையை பெற்றிருந்தது.அது 84 மீ்ட்டர் நீளம் கொண்டதாக இருந்தது. இதற்கு அடுத்த படியாக போயிங் 764 -8 ரக விமானம் 76 மீட்டர் நீளம் உடையதாக இருந்தது. தற்போது இந்க விமானம் பழைய சாதனைகளை முறியடித்துள்ளது.                              

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்