முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விசாரணைக்கு இலங்கை ஒத்துழைக்க இங்கி., வலியுறுத்தல்

சனிக்கிழமை, 1 மார்ச் 2014      உலகம்
Image Unavailable

 

லண்டன், மார்ச்.2 - இலங்கையில் நடைபெற்றப் போரில் ஏராளமான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக சரவதேச விசாரணைக்கு இலங்கை ஒத்துழைக்க வேண்டும் என்று இங்கிலாந்து அரசு வலியுருத்தி உள்ளது.

இலங்கையில் நடந்த போரின் போது ஏராளமான அப்பாவி மக்கள் கொன்று புதைக்கப்பட்டதாக புகார்கள் உள்ளன. இதுதொடர்பாக இலங்கை அதிபர் ராஜ்பக்சேவை சர்வதேச நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டும் என்று பல்வேறு நாடுகள் வலியுருத்தி வருகின்றன. இதுதொடர்பாக ஐ.நா.வில் அமெரிக்கா தீர்மானமும் கொண்டுவந்தது. இந்நிலையில் ஐ.நா.வில் மீண்டும் இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டுவரப்பட உள்ளது.

இது குறித்து இங்கிலாந்து வெளியுறவுத்துறை மற்றும் காமன் வெல்த் அலுவலக அமைச்சர் ஹூகோஸ்வைர் கூறியதாவது: இலங்கை போரில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் புனரமைப்பு பண்கள், மக்களின் மறுவாழ்வு பணிகளுக்கு இலங்கை அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கது. எனினும், ஐ.நா. சபையின் மனித உரிமை கவுன்சில் மூலம் இலங்கைக்கு எதிராக நடைபெரும் சர்வதேச விசாரணைக்கு நடைமுரைபடுத்துவது சர்வதேச சமுதாயத்தின் கடமை. இதை பிரிட்டன் அரசும் உறுதிப்படுத்துகிறது.

இலங்கையில் நடைபெற்ற படுகொலை சம்பவம் தொடர்பாக, சுதந்தி ரமான் முறையில் சர்வதேச விசாரணை நடைபெற வேண்டும். இலங்கையில் மதரீதியாக சிறுபான்மையினர் மீது நடத்தப்பட்ட அராஜக தாக்குதல்கள், பாலியல் கொடுமைகள் மற்றும் வன்முறைகள் குறித்த அறிக்கைகள், வன்முறையில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொடர்ந்து இலங்கை ரானுவ கண்கானிப்பு,அப்பகுதியில் சுகந்திரமாக போக்கு மற்றும் செயல்களுக்கு தடை விதித்தல் போன்றவை குறித்து ஐ.நா.வின் மனித உரிமை கவுன்சிலின் சுதந்திரமான நீதி விசாரணையை இலங்கை அரசு ஏற்று ஒத்துலைக்க வேண்டும்.

இலங்கையில் பலியானவர்களின் கணக்கெடுப்பு பணியில் ஐ.நா.சபை தெரிவித்த அணைத்து தொழில்நுட்ப உதவிகளையும் இலங்கை அரசு ஏற்க தவறியுள்ளது. இலங்கையில் தற்போது மக்களிடையே நிலவ வேண்டிய சுதந்திரமான போக்கையும் கடந்த காலங்களில் போரின்பொது நடைபெற்ற வன்முறை தொடர்பான சர்வதேச நீதி விசாரணையையும் இலங்கை ஏற்க தவறிவிட்டது. எனவே, சர்வதேச விசாரணையை இலங்கை அரசு ஏற்க வேண்டும்.

இவ்வாறு ஹூகோஸ்வைர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்