முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா-அமெரிக்கா இடையேநெருங்கிய உறவு இருக்க வேண்டும்- மத்திய மந்திரி சிதம்பரம் கருத்து

சனிக்கிழமை, 28 மே 2011      தமிழகம்
Image Unavailable

புதுடெல்லி,மே.- 28 - உலக அளவில் தீவிரவாதத்தை ஒழிக்க வேண்டும் என்றால் இந்தியா-அமெரிக்கா இடையே பலமான உறவு இருக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இந்தியா-அமெரிக்கா இடையே உள்நாட்டு பாதுகாப்பு குறித்த பேச்சுவார்த்தை நேற்று இருநாட்டு பிரதிநிதிகளுக்கிடையே புதுடெல்லியில் தொடங்கியது. முதல் நாள் அன்று நடைபெற்ற கூட்டத்தில்  மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கலந்துகொண்டு பேசுகையில் மேற்கண்டவாறு கூறினார்.
இந்தியாவை சுற்றியுள்ள அண்டைநாடுகள் கடின போக்கை கையாளுகின்றன. பாகிஸ்தானில் தீவிரவாத இயக்கங்களுக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் அனைத்தும் இருக்கின்றன. அங்கிருந்துதான் இந்தியாவுக்குள் தீவிரவாதம் நுழைகிறது. தீவிரவாதத்தை அந்த நாட்டு அரசு ஒரு கொள்கையாக வைத்திருக்கிறது. அதனால் உலக அளவில் தீவிரவாதத்தையும் இதர அச்சுறுத்தல்களையும் எதிர்த்து போரிட வேண்டுமென்றால் இந்தியா-அமெரிக்கா இடையே வலுவான உறவு இருக்க வேண்டும் என்று சிதம்பரம் வலியுறுத்தி கூறினார். இந்திய மக்களின் பாதுகாப்புக்கு அண்டை நாடுகளில் அமைதி, முன்னேற்றம் இருக்க வேண்டும். உலகத்திலேயே இல்லாத அளவுக்கு இந்தியாவை சுற்றியுள்ள அண்டைநாடுகளால் அச்சுறுத்தலும் ஆபத்தும் ஏற்பட்டுள்ளது. நமது மிகவும் அண்டை நாடான பாகிஸ்தான் தீவிரவாதத்தின் மையமாக திகழ்கிறது என்றும் அமைச்சர் ப.சிதம்பரம் மேலும் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்