முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் வழக்கம் போல் மாணவிகளே ஆதிக்கம்

சனிக்கிழமை, 28 மே 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, மே.- 28 - தமிழகம் மற்றும் புதுவையில் நடைபெற்ற எஸ்.எஸ்.எல்.சி., மெட்ரிக் தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில் வழக்கம் போல் மாணவிகளே அதிகம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதோடு மட்டுமன்றி இதுவரை இல்லாத வகையில் 5 மாணவிகள் 500க்கு 496 மதிப்பெண்கள் எடுத்து முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை பள்ளிகள் மூலமும், தனியாகவும் 9 லட்சத்து 60 ஆயிரத்து 823 மாணவ​ மாணவிகள் எழுதினார்கள். பள்ளிகள் மூலம் 8 லட்சத்து 38 ஆயிரத்து 165 பேர் பரீட்சை எழுதினார்கள். இதில் மாணவர்கள் 4 லட்சத்து 9 ஆயிரத்து 555 பேர் ஆவார்கள்.
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதில், 7 லட்சத்து 14 ஆயிரத்து 786 மாணவ​ மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 85.30 ஆகும். இது கடந்த ஆண்டை விட 2.8 சதவீதம் கூடுதலாகும். கடந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் 82.50 ஆகும்.
வழக்கம் போல மாணவர்களை விட மாணவிகளின் தேர்ச்சி அதிகமாக இருந்தது. 3 லட்சத்து 77 ஆயிரத்து 815 மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 88.10 ஆகும். கடந்த ஆண்டு 85.50 சதவீத மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். மாணவர்களின் தேர்ச்சி 82.30 சதவீதம் ஆகும். 3 லட்சத்து 36 ஆயிரத்து 971 பேர் தேர்ச்சி பெற்றனர். கடந்த ஆண்டு 79.40 சதவீதம் பேரே தேர்ச்சி பெற்றனர்.
4 லட்சத்து 77 ஆயிரத்து 429 பேர் 60 சதவீதத்துக்கும் கூடுதலாக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதுவரை எந்த ஆண்டும் இல்லாதவகையில் இந்த ஆண்டு கணிதத்தில் 12,532 பேர் 100க்கு 100 மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்துள்ளனர். கடந்த ஆண்டில் 2,399 பேர் மட்டுமே கணிதத்தில் சென்டம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. அதே போல் அறிவியல் பாடத்திலும் இம்முறை 3,677 (கடந்த முறை 1,310 பேர்), மாணவ, மாணவியரும், சமூக அறிவியல் பாடத்தில் 756 பேரும் 100க்கு 100 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. இதில் மாநிலத்தில் முதல் ரேங்காக 500க்கு 496 மதிப்பெண்கள் எடுத்து 5 மாணவிகள் சாதனை படைத்துள்ளனர். அதே போல் 2வது ரேங்கை 500க்கு 495 மதிப்பெண்கள் எடுத்து 11 மாணவ மாணவிகள் பகிர்ந்துகொள்கிறார்கள். 500க்கு 494 மதிப்பெண்களை 24 பேர் எடுத்து 3வது இடத்தை பிடிக்கின்றனர்.
இதுபற்றிய விவரம் வருமாறு:
முதலிடம்
1.எம்.நித்யா(496)-எஸ்.எச்.பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஸ்ரீவில்லிபுத்தூர்.
2.எஸ்.ரம்யா(496)-ஸ்ரீகுருகுலம் பள்ளி, மூலவாய்க்கால், கோபிசெட்டிபாளையம்.
3.எஸ்.சங்கீதா(496)-முத்தமிழ் பள்ளி, பெரியேரி, சேலம்.
4.எம்.மின்னலாதேவி(496)-அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, செய்யாறு.
5.ஆர்.ஹரினி(496)-அவர் லேடி பள்ளி, திருவொற்றியூர், பொன்னேரி.
2வது இடம்
1.ஏ.சதாம் உசேன்(495)-முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி, மேலப்பாளையம், திருநெல்வேலி.
2.வி.பாக்யஸ்ரீ(495)-ஸ்பிக் நகர் பள்ளி, தூத்துக்குடி.
3.பி.அருண்ராஜா(495)-முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி, அபிராமம், பரமக்குடி.
4.ஜெ.ஜெயப்பிரியா(495)-எஸ்.எச்.என்.ஈத்தேன் ஹார்வே பள்ளி, சாத்தூர், அருப்புக்கோட்டை.
5.டி.ஹரிபாரதி(495)-நாடார் மேல்நிலைப்பள்ளி, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர்.
6.எம்.பொன்மணி(495)-எஸ்.ஆர்.பி.ஏ.கே.டி.டி. பள்ளி, ராஜபாளையம்,ஸ்ரீவில்லிபுத்தூர்.
7.என்.எம்.கார்த்திக்(495)-செயின்ட்மேரீஸ் பள்ளி, மதுரை.
8.ஏ.சுபலட்சுமி(495)-விவேகானந்தா பள்ளி, செல்லபெருமாள்பேட், புதுச்சேரி.
9.வி.ஸ்ரீனிரதி(495)-அரசு மேல்நிலைப்பள்ளி, கவரப்பேட்டை, பொன்னேரி.
10.எம்.புவனா(495)-விஜயந்தா மேல்நிலைப்பள்ளி, ஆவடி, பொன்னேரி.
11.ஆர்.சுஷ்மிதா(495)-பென்டிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, வேப்பேரி, சென்னை.
3வது இடம்
1.டி.எல்.நிம்ருதா(494)-செயின்ட் ஜோசப் கான்வென்ட், நாகர்கோவில்.
2.கே.லட்சுமிபிரியா(494)-எஸ்.எம்.ஆர்.வி. மேல்நிலைப்பள்ளி, வடசேரி,நாகர்கோவில்.
3.ஜெ.உமா(494)-எஸ்.எச்.என்.ஈத்தேல் ஹார்வே பள்ளி, சாத்தூர், அருப்புக்கோட்டை.
4.லலித் செல்லப்பா கார்பென்டர்(494)-பி.ஏ.சி.எம்.பள்ளி, ராஜபாளையம்,ஸ்ரீவில்லிபுத்தூர்.
5.குங்குமாகல்யா(494)-எஸ்.கே.பி. மேல்நிலைப்பள்ளி, உடுமலைப்பேட்டை, திருப்பூர்.
6.பி.எம்.இந்து(494)-அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கவிந்தபாடி, கோபிசெட்டிபாளையம்.
7.எஸ்.ஹரிபிரபா(494)-ஸ்ரீகுருகுலம் மேல்நிலைப்பள்ளி, மூலவாய்க்கால், கோபிசெட்டிபாளையம்.
8.ஏ.ஷோபனா(494)-ஸ்ரீகுருகுலம் மேல்நிலைப்பள்ளி, கோபிசெட்டிபாளையம்.
9.எஸ்.அசோக்குமார்(494)-எஸ்.வி.வித்யாலயா, தசம்பாளையம், கோபிசெட்டிபாளையம்.
10.என்.லோகேஷ்குமார்(494)-ஜி.வி.மேல்நிலைப்பள்ளி, மாசிலாபாளையம், சங்ககிரி.
11.விக்னேஷ்வரி(494)-வெற்றி விகாஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கீரனூர், நாமக்கல்.
12.கே.காவியா(494)-அரசு மேல்நிலைப்பள்ளி, காரிமங்கலம், தருமபுரி.
13.எம்.செந்தில்குமார்(494)-சேரன் மேல்நிலைப்பள்ளி, புண்ணம்சத்திரம், கரூர்.
14.எஸ்.ஜெயப்பிரகாஷ்(494)-ஈ.ஆர்.மேல்நிலைபள்ளி, திருச்சி.
15.எம்.ஜோதீஸ்வரன்(494)-ஆர்.சி. மேல்நிலைப்பள்ளி, திருச்சி.
16.எஸ்.காயத்ரி(494)-அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பட்டுக்கோட்டை.
17.ஏ.பவித்ராதேவி(494)-ஆக்ஸிலியம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தஞ்சாவூர்.
18.சி.அபினயா(494)-கலைமகள் மேல்நிலைப்பள்ளி, வல்லம், தஞ்சாவூர்.
19.ஜே.ஷைனி(494)-மவுண்ட் பார்க் மேல்நிலைப்பள்ளி, தியாகதுருகம், விழுப்புரம்.
20.எம்.ஷபனா பேகம்(494)-செயின்ட் தெரசாஸ் மேல்நிலைப்பள்ளி, பல்லாவரம்.
21.ஈ.தனசேகர்(494)-டி.ஆர்.பி.சி.சி. மேல்நிலைப்பள்ளி, திருவள்ளூர்.
22.எச்.சங்கீதா(494)-செயின்ட் அந்தோனிஸ் மேல்நிலைப்பள்ளி, ஆர்.ஏ.புரம், சென்னை.
23.ஜெ.தாமோதரன்(494)-பி.ஏ.கே.பழனிச்சாமி மேல்நிலைப்பள்ளி, சென்னை.
24.எஸ்.ஐயப்பன்(494)-பி.ஏ.கே.பழனிச்சாமி மேல்நிலைப்பள்ளி, சென்னை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago