மதிப்பெண் குறைவால் விரத்தி இந்திய சிறுவன் தற்கொலை

புதன்கிழமை, 5 மார்ச் 2014      இந்தியா
Image Unavailable

 

துபாய், மார்ச்.6 - அரபு நாட்டில் உள்ள சார்ஜா நகரத்தில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த இந்திய தம்பதி வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 16 வயதில் மகன் இருந்தான். அவன் அங்குள்ள பள்ளியில் 11-ஆம் கிரேடில் படித்து வந்துள்ளான்.

பள்ளியில் நடைபெற்ற தேர்வு ஒன்றை எழுத சென்ற பின் மாயமானான். தகவல் அறிந்த சார்ஜா போலீசார் அக்கம் பக்கத்தில் விசாரணை நடத்தினர். அப்போது அருகில் வாடகைக்கு குடியிருந்த ஒருவரின் வீட்டு மாடியில் மானவன் தூக்கில் பிணமாக கிடப்பது தெரியவந்தது. அதனை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கடந்த சில நாட்களாகவே சரியாக தேர்வு எழுத வில்லையே என்ற விரக்தியில் இருந்தது தெரிந்தது. மேலும் சரியாக படிப்பில் கவனம் செலுத்த இயலாமல் பள்ளியில் மதிப்பெண் குறாவு காரணமாக மன அலுத்தத்துடன் காணப்பட்டதாக பெற்றோர் தெரிவித்தனர்.ே

இதனையடுத்து விரக்தி அடைந்து தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்: