முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேடப்படும் தீவிரவாதிகள் பட்டியல்: இந்திய நிலைக்கு அமெரிக்கா ஆதரவு

சனிக்கிழமை, 28 மே 2011      உலகம்
Image Unavailable

வாஷிங்டன்,மே.- 28 - தேடப்படும் 50 தீவிரவாதிகளின் பெயர்கள் அடங்கிய பட்டியலை பாகிஸ்தானிடம் அளிப்பது என இந்தியா முடிவு செய்ததை அமெரிக்கா வரவேற்றுள்ளது. இது தொடர்பாக மத்திய ஆசிய நாடுகளுக்கு பொறுப்பு வகிக்கும் அமெரிக்க வெளியுறவு துறை இணை அமைச்சர் ராபர்ட் பிளேக் கூறியதாவது,  மும்பை தாக்குதலுக்கு காரணமானவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வழங்க வேண்டும். இந்தியாவுக்குள் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுப்பதற்கான நடவடிக்கைகளை பாகிஸ்தான் மேற்கொள்ள வேண்டும் என 2 நிபந்தனைகளை இந்தியா விதித்திருந்தது. இவற்றை நிறைவேற்றினால்தான் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தையை தொடர முடியும் என்றும் இந்தியா வலியுறுத்தி இருந்தது.
இந்த நிபந்தனைகள் தொடர்பாக பாகிஸ்தான் முழுமையான நடவடிக்கைகளை எடுக்காவிட்டாலும் சில நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இருந்த போதிலும் பாகிஸ்தானில் ஸ்திரத்தன்மை ஏற்பட வேண்டும் என்று அமெரிக்கா விரும்புவதை போலவே இந்தியாவும் விரும்புவதால் நிபந்தனைகளை பாகிஸ்தான் பூர்த்தி செய்யாத போதும் உள்துறை செயலர்கள் அளவிலான பேச்சுவார்த்தைக்கு இந்தியா சம்மதித்தது.
இந்தியாவில் பயங்கரவாத சம்பவங்கள் தொடர்பாக தேடப்படும் 50 தீவிரவாதிகளின் பட்டியலை இந்த பேச்சுவார்த்தையின் போது பாகிஸ்தானிடம் அளிக்க இந்தியா முயற்சி செய்ததை அமெரிக்கா வரவேற்கிறது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்