அமெரிக்க ஆயுத கப்பல் வழக்கு: 37 பேரின் காவல் நீடிப்பு

வியாழக்கிழமை, 6 மார்ச் 2014      தமிழகம்
Image Unavailable

 

தூத்துக்குடி.மார்ச்.07 - அமெரிக்க ஆயுத கப்பல் வழக்கில் கைது செய்யப்பட்ட 37 பேரின் காவல் வருகிற 14ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

தூத்துக்குடி அருகே இந்திய கடல் எல்லைக்குள் ஆயுதங்களுடன் அத்துமீறி நுழைந்த சீமென்கார்டு என்னும் அமெரிக்க தனியார் பாதுகாப்பு கப்பலை கடலோர காவல்படையினர் கடந்த அக்டோபர் மாதம் 11ம் தேதி மடக்கி பிடித்தனர். அந்த கப்பலில் இருந்த 25 பாதுகாவலர்கள்இ 10 மாலுமிகள் ஆக மொத்தம் 35 பேரை கியூ பிரிவு போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 35 அதிநவீன துப்பாக்கிகள்இ 5 ஆயிரத்து 680 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 

அதே போன்று ஆயுத கப்பலுக்கு டீசல் வினியோகம் செய்ததாக 5 பேரை கியூ பிரிவு போலீசார் கைது செய்தனர். இதில் ரஞ்சித்குமார்இ விஜய்இ செல்லம்இ முருகேஷ் ஆகிய 4 பேருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டு உள்ளது. மேலும் டீசல் வினியோகம் செய்த வழக்கில் முனியதேவன் கோர்ட்டில் சரண் அடைந்தார்.

இந்த வழக்கில் சிறையில் உள்ள 37 பேரின் காவல் நேற்றுடன் முடிவடைந்தது. கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் உள்ள 12 பேரும்இ சென்னை புழல்-2 சிறையில் உள்ள 23 பேரும்  வீடியோ கான்பரன்சிங் மூலம் முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு நீதிபதி சி.கதிரவன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதே போன்று டீசல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள 2 பேரும் கோர்ட்டில் நேரில் ஆஜர்படுத்தப்பட்டனர்.  அவர்களுக்கு வருகிற 14ம் தேதி வரை காவலை நீடித்தும்இ அன்று அனைவரையும் நேரில் கோர்ட்டில் ஆஜர்படுத்தவும் நீதிபதி உத்தரவிட்டார். அன்று இந்த வழக்கு விசாரணை மேல் கோர்ட்டுக்கு மாற்றப்படும் என்று தெரிகிறது.

 

 

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: