முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

20 கிலோ இலவச அரிசி திட்டம் முதல்வர் 1ம் தேதி துவக்குகிறார்

சனிக்கிழமை, 28 மே 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, மே. - 29 - 20 கிலோ இலவச அரிசி திட்டத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதா வரும் ஜூன் 1 ம் தேதி துவக்கி வைக்கிறார். அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் ரேசன் கார்டுகளுக்கு 20 கிலோ இலவச அரிசியும், அந்தியோதையா அன்னபோஜனா திட்டத்தின் கீழ் ஏழைகளுக்கு 35 கிலோ அரிசியும் வழங்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் ஜெயலலிதா அறிவித்திருந்தார். முதலமைச்சராக ஜெயலலிதா கடந்த 16ம் தேதி பதவியேற்றதும் இலவச அரிசி வழங்கும் திட்டத்தில் கையெழுத்திட்டார். அரிசி பெற தகுதியுடைய பச்சை அட்டை ரெசன் கார்டுகளுக்கு இந்த திட்டத்தின் கீழ் 20 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும். அந்தியோதையா அன்னபோஜனா திட்டத்தின் கீழ் அரிசி பெறுபவர்களுக்கு 35 கிலோ அரிசி இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். இதற்கான அரசாணை கடந்த 17ம் தேதி வெளியிடப்பட்டது. இந்த திட்டம் ஜூன் 1ம் தேதி முதல் அமுலுக்கு வரும் என்றும் அரசு அறிவித்தது. தமிழ்நாட்டில் 1கோடியே 95 லட்சம் ரேசன் கார்டுகள் உள்ளன. இதில் சர்க்கரை மட்டும் வாங்குவோர், கவுரவ ரேசன் கார்டு வைத்திருப்போர் தவிர மீதமுள்ள 1கோடியே 84 லட்சத்து 53 ஆயிரத்து 750 ரேசன் கார்டுகளுக்கு இலவச அரிசி வழங்கப்படவுள்ளது. 20 கிலோ இலவச அரிசி 1 கோடியே 65 லட்சத்து 91 ஆயிரத்து 482 கார்டு தாரர்களுக்கு கிடைக்கும். வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள ஏழைகள் வைத்திருக்கும் 18 லட்சத்து 62 ஆயிரத்து 268 கார்டுகளுக்கு தலா 35 கிலோ இலவச அரிசி கிடைக்கும். இலவச அரிசி வழங்கும் இத்திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா சென்னையில் வரும் 1ம் தேதி காலை 10 மணிக்கு துவக்கி வைக்கிறார். ஆழ்வார்பேட்டை, ஸ்ரீராம் காலனியில்  உள்ள ரேசன் கடையில் இலவச அரிசியை மக்களுக்கு வழங்குகிறார். அதைத் தொடர்ந்து மாவட்டந்தோறும் அந்தந்த மாவட்ட அமைச்சர்கள், எம்.எல்.ஏ க்கள் இந்த துவக்கி வைக்கிறார்கள். முதல்வர் ஜெயலலிதா ஆட்சி பெறுப்பேற்ற பிறகு பங்கேற்கும் முதல் பொது நிகழ்ச்சி என்பதால் விழா ஏற்பாடுகள் மிகச்சிறப்பாக செய்யப்பட்டு வருகிறது. உணவுத்துறை அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ ஆகியோர் இதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

20

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்