முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய எல்லை வரை சீனா ரயில் பாதை

வெள்ளிக்கிழமை, 7 மார்ச் 2014      உலகம்
Image Unavailable

 

பெய்ஜிங், மார்ச். 8 - உலகிலேயே மிகப் பெரிய ரயில் பாதை யான கிங்ஹாங் _ திபெத் வரையுள்ள ரயில் இருப்புப் பாதையை இந்திய எல்லைக்கு அருகே உள்ள ஜிகாசேவில் வரை சீனா ஞிட்டிக்கிறது. 

சீனாவின் கட்டுப் பாட்டில் உள்ள திபெத்தின் ஜிகாசே நகர் வரை ரயில்வே இருப்புப் பாதையை ஞிட்டிப்பதால் அங்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என சீனா தெரிவித்து உள்ளது. 

ஆனால் அரசியல் மற்றும் ராணுவ இலக்குகளை வலுப்படுத்தும் விதமாகவே இந்த ரயில் பாதையை சீனா அமைக்க முடிவு எடுத்திருக்கிறது என்று கருதப்படுகிறது. 

சீனாவில் லாசா முதல் ஜிகாசே வரை புதிதாக அமைக்க உள்ள 235 கிலோ மீட்டர் ரயில் இருப்புப் பாதை வரும் அக்டோபர் மாதத்துக்குள் செயல்பாட்டுக்கு வரும் . 

புதிய ரயில் பாதையை அமைப்பதன் மூலம் சீனாவின் ராணுவத்தை எளிதாக இந்திய எல்லை வரை கொண்டு வர முடியும். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்