முக்கிய செய்திகள்

சிதம்பரம் தொகுதி: விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கீடு

சனிக்கிழமை, 8 மார்ச் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மார்ச் 8 - தி.மு.க. கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு சிதம்பரம் (தனி)தொகுதி மட்டும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  இதற்கான உடன்பாட்டில் கருணாநிதியும், திருமாவளவனும் கையெழுத்திட்டனர். 

 பாராளுமன்றத் தேர்தலில்  3 தனி தொகுதிகளையும், 2 பொதுத் தொகுதிகளையும் ஒதுக்குமாறு விடுதலை சிறுத்தைகள் கட்சி கோரி வந்தது. இது தொடர்பாக  விடுதலை சிறுத்தைகள் கட்சித்  தலைவர் திருமா வளவன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் இதில் உடன்பாடு எதுவும் எட்டப்பட வில்லை.

ஆனால் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒரே ஒரு தொகுதி மட்டுமே ஒதுக்கப்படும் என்பதில் திமுக கடைசிவரை உறுதியாக  இருந்தது. பின்னர் விசுதலை சிறுத்தைகள் கட்சி இறங்கி வந்து திமுக கொடுத்த ஒரு தொகுதியை ஏற்றுக் கொண்டது.           

 

           

இதை ஷேர் செய்திடுங்கள்: