முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மிக மோசமான அதிபர் ஒபாமா: பாபி ஜிண்டால்

சனிக்கிழமை, 8 மார்ச் 2014      உலகம்
Image Unavailable

 

வாஷிங்கடன், மார்ச்.9 - அமெரிக்காவின் வரலாற்றில் மிகவும் மோசமான அதிபர் ஒபாமாதான் என இந்திய வம்சாவளியைச் சேர்ந்த லூசியானா ஆளுனரும், குடியரசுக் கட்சியின் வருங்கால அதிபர் வேட்பாளர் எனக் கருதப்படுவருமான பாபி ஜிண்டால் விமர்சித்துள்ளார்.

தலைநகர் வாஷிங்கடனில் கட்சி நிகழச்சி ஒன்றில் அவர் பேசியதாவது: அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜிம்மி கார்ட்டர்தான் இது வரை பதவி அமைத்த அமெரிக்க அதிபர்களிலேயே மிக மோசமானவர் என்று எண்ணியிருந்தேன். ஆனால் அந்த இடத்தை தற்போதைய அதிபர் ஒபாமா பிடித்துவிட்டார்.

கடந்த சில நாள்களாக உலகம் முலுவதும் நுகழ்ந்து வரும் சம்பவங்கள் இதை உறுதிப்படுத்துகின்றன. ரஷிய அதிபர் அண்டை நாடு மீது படையெடுப்பு நடத்துகிறார். நமது அதிபரோ படைக்குரைப்பை பற்றி பேசுகிறார். வலிமையான அமெரிக்கா தான, அமைதியான உலகத்துக்கான தேவை என்பதைக் கூட உணராத அதிபராக ஒபாமா இருக்கிறார்.

அமெரிக்காவின் மிகச்சிறந்த பள்ளிகளில் அவர் படித்திருந்தும் பலனில்லை. நான மடட்டும் ஒபாமாவாக இருந்திருந்தாள், மூன்று ஆண்டுகளாக படித்தும் எதையும் கற்றுக் கொள்ளாததால், கட்டணத்தைத் திருப்பித் தரச் சொல்லி ஹார்வர்டு சட்டக்கலூரி மீது வழக்கு தொடுத்திருப்பென் என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்