முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உக்ரைன் பிரச்னை: கருங்கடல் விரைந்த போர்க்கப்பல்

சனிக்கிழமை, 8 மார்ச் 2014      உலகம்
Image Unavailable

 

வாஷிங்டன், மார்ச்.9 - போர்ப் பதற்றம் ஏற்பட்டுள்ள உக்ரைனில் கிரீமியா திபகற்பத்துக்கு அரிகில் போர்ப் பயிற்சிகளை மேற்கொள்வதற்காக அமெரிக்காவிம் தாக்குதல் போர்க்கப்பல்லான ஸ்ர "யுஎஸ்எஸ் டிரக்ஸ்டன்" கருங்கடல் நோக்கி விரைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிரீமியா மீது ரஷியா படையெடுத்துள்ள நிலையில், ருமேனியா, பல்கேரியா ஆகிய நாடுகளோடு இணைந்து அந்தப் பகுதியில் அமெரிக்கா போர்ப் பயிர்சியில் ஈடுபட்டுவது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக உக்ரைன் மீதான ரஷியன் நடவடிக்கை அந்நாட்டின் இறையாண்மையை மீறும் செயல் என்று ரஷிய அரிபர் புதினுடம் அமெரிக்க அகிபர் ஒபாமா கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறியதாவது: ரஷிய அதிபர் விளாதிமீர் புதினுடன் தொலைபேசியில் அதிபர் ஒபாமா பேசினார். அப்போதி அவரிடம் உக்ரைனில் வாழும் ரஷிய வம்சாவளியினர் உள்பட அனைத்து மக்களின் உரிமையை பாதுகாக்கப்படுவதை உறுதி செய்யும் வகையில் அந்நாட்டின் அரசுடன் ரஷியா பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அதற்கான வசதிகள் சர்வதேச நாடுகள் மூலம் ஏற்படுத்தித் தரப்படும். தனது படைகளை ரஷியா திரும்ப அழைத்துக்கொள்ள வேண்டும். உக்ரைனுல் மே மாதம் நடைபெறவுள்ள தேர்தலுக்கு மக்கள் தயாராகும் வகையில் உலக மக்கள் அவர்களுக்கு துணையாக இருக்க வேண்டியது அவசியம் என்று ஒபாமா வெரிவித்ததாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

உக்ரைனிலிருந்து வெளியேறுவகற்கு முன்னர் அதிபர் விக்டர்யானுகோவிச் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து மக்கள் கொல்லப்படுவதற்கு துணை போனதாகக் குற்றம் சாட்டி அவருக்கு எதிராக அந்நாட்டின் புதுய அரசு கைது வாரண்ட் பிறப்பித்திருந்தது.

இந்நிலையில், இந்தப் புகார்களின் அடிப்படையில் அவரை சர்வதேச அளவில் தேடப்படும் குற்றவாலியாக அறிவிப்பது பற்றி பரிசீலித்து வருவதாக சர்வதேச போலீஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்