முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆசிய கோப்பை: இந்தியா - பாக்., இன்று பலப்பரிட்சை

சனிக்கிழமை, 1 மார்ச் 2014      விளையாட்டு
Image Unavailable

 

டாக்கா, மார்ச். 2 - ஆசிய கோப்பை கிரிக்கெட்  போட்டியில் 

இந்திய அணி இன்று நடக்க இருக்கும் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் மோத இருக்கிறது. இந்தப் போட்டி இந்தியாவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. இதில் வெற்றி பெற்றால் தான் இந்தியா இறுதிப் போட்டிக்குள் நுழைய முடியும். 

5 நாடுகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட்  போட்டி வங்காளதேசத்தில் கடந்த சில நாட்களாக வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. 

5 முறை சாம்பியனான இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் வங்காளதேச அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. 

பின்பு நடந்த 2_வது லீக் ஆட்டத்தில் இலங்கை அணியுடன் மோதியது. இதில் இலங்கை அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இந்த தோல்வியால் இந்திய அணிக்கு நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. சங்கக்கராவின் அதிரடியான சதத்தால் அந்த அணி வெற்றி  பெற்றது. 

இந்திய அணி இன்று நடக்கும் இருக்கும் 3_வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியுடன் மோத இருக்கிறது. எனவே இந்த ஆட்டம் இந்திய அணிக்கு முக்கியமானதாகும். 

இறுதிப் போட்டிக்கு தகுதி  பெற இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்த வேண்டிய நெருக்கடியில் உள்ளது. 

கடந்த ஆட்டத்தில் ஸ்டூவர்ட் பின்னி பந்து வீச்சில் எந்த வித தாக்கத்தையும் ஏற்படுத்த வில்லை. பேட்டிங்கிலும் தனக்கு கிடைத்த வாய்ப்பை தவறவிட்டார். 

இதனால் இன்று நடக்க இருக்கும் லீக் ஆட்டத்தில் பின்னி கழற்றி விடப்படலாம் என்று தெரியவருகிறது. 3 வேகப்பந்து வீரருடன் களம் இறங்குவது அவசியமானதாகும். 

பாகிஸ்தானை தோற்கடிக்க இந்திய அணி பேட்டிங் பந்து வீச்சில் சமபலத்துடன் இருக்க வேண்டும். ரோகித் சர்மா, அம்பதி ராயுடு, திணேஷ் கார்த்திக் ஆகியோர் தங்களது பேட்டிங் பங்களிப்பை வெளிப்படுத்த வேண்டும். 

கேப்டன் விராட் கோக்லி பேட்டிங்கில் நல்ல பார்மில் இருக்கிறார். கடைசி ஆட்டத்தில் அவர் தோல்வி கண்டார். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி அவருக்கு அடுத்த சவால் என்பதில் சந்தேகம் இல்லை. 

பாகிஸ்தான் அணி தொடக்க ஆட்டத்தில் 12 ரன்னில் இலங்கையிடம் தோற்றது. 2_வது ஆட்டத்தில் 72 ரன்னில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது. 

அந்த அணியும் இறுதிப் போட்டியில் நுழைய இந்தியாவை வீழ்த்த கடுமையாக போராடும்.  இரு அணிகளும் சமபலம் வாய்ந்தவை என்பதால் ஆட்டம் விறுவி

றுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இன்றைய ஆட்டம்  இந்திய நேரப்படி பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் கிரிக்கெட் சேனலில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. 

இந்திய அணி : _ விராட் கோக்லி (கேப்டன்), ரோகித் சர்மா, ஷிகார் தவான், ரகானே, அம்பதி ராயுடு, திணேஷ் கார்த்திக் , ஸ்டூவர்ட் பின்னி, ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், புவனேஷ்வர் குமார், மொகமது சமி, புஜாரா, வருண் ஆரோன், ஈஷ்வர் பாண்டே மற்றும் அமித் மிஸ்ரா ஆகியோர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago