பெண்ணுக்கு தொந்தரவு: அமெரிக்காவில் இந்தியர் கைது

புதன்கிழமை, 5 மார்ச் 2014      வர்த்தகம்
Image Unavailable

 

வாஷிங்கடன், மார்ச்.6 - விமானத்தில் பெண் பயணிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அமெரிக்காவில் இந்தியாவைச் சேர்ந்த தேவேந்தர் சிங் என்பவர் கைது செய்யப்பட்டார்.

இது குறித்து அதிகாரிகள் குறியதாவது: அமெரிக்காவின் பேட்டன் ரக் நகரில் வசித்து வரும் இவர், ஹவுஸ்டன் நகரில் இருந்து நூவர்க் நகருக்கு விமானத்தில் புறப்பட்டுச் சென்றார். அப்போது பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்த பெண் பயணிக்கு அவர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக் கூறப்படுகிறது. விமானத்தில் தான் தூங்கிக் கொண்டிருந்த வெளையில், தேவேந்தர் சிங் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும், அந்த பெண் பயணி புகாரிள் குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து எஃப்.பி.ஐ. அத்காரிகளால் கைது செய்யப்பட்ட தேவேந்தர் சிங், நியூஜர்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். தேவேந்தர் சிங் மீதான பாலியல் புகார் நிரூபிக்கப்பட்டால, அவரிக்கு அதிகபட்சமாக 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், 2,50,000 அமெரிக்க டாலர்கள் அபராதமும் விதிக்கப்படும்.

இதை ஷேர் செய்திடுங்கள்: