Idhayam Matrimony

கனடா பிரதமரிடம் தோற்ற ஓபமா 2 பெட்டி "பீர் " அனுப்பினர்

ஞாயிற்றுக்கிழமை, 9 மார்ச் 2014      உலகம்
Image Unavailable

 

வாஷிங்டன், மார்ச்.10 - ஐஸ் ஹாக்கி ஒலிம்பிக் போட்டியில் கனடா பிரதமரிடம் தோற்ற அமெரிக்க ஒபாமா 2 பெட்டி "பீர் " அனுப்பி வைத்தார்.  கடந்த மாதம் பிப்பரவரி ரஷியாவில் உள்ள சோசியல் குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடந்தது. இதில் நடந்த ஐஸ் ஹாக்கி போட்டியில் கனடா மற்றும் அமெரிக்கா ஆண்கள் அணி மோதியது. இதில் அமெரிக்க அணி வெற்றி பெறும் என கனடா பிரதமர் ஸ்டீபன் கார்பரிடம் பந்தயம் கட்டியிருந்தார். மெக்சிகோவில் நடந்த வட அமெரிக்காவில் தலைவர்கள் மாநாட்டின் போது இவர்கள் பந்தயம் கட்டினர். அமெரிக்க அதிபர் ஒபாமா பந்தயத்தில் தோற்பவர்கள் அவர்கள் நாட்டில் தயாராகும் உயர்ரக "பீர் " பாட்டில்களை பரிசாக அனுப்ப வேண்டும் என்று உறுதி அளிக்கப் பட்டது. ஆனால் அதில் 1 - 0 என்ற கோல் கணக்கில் கனடா வெற்றி பெற்றது. அதேநேரம் அமெரிக்க பெண்கள் ஹாக்கி அணி 3 -2 கோல் கணக்கில் வென்றது. இதற்கிடையே டொரண்டோவில் நடந்த ஒரு ரேடியோ நிகழ்ச்சியில் பங்கேற்ற கனடா பிரதமர் ஹார்பர் பந்தயத்தில் தோல்வி அடைந்த அமெரிக்க அதிபர் ஒபாமாவிடம் இருந்து தனக்கு "பீர் " பாட்டில்கள் இன்னும் வரவில்லை என "ஜோக்" அடித்தார். இதுபற்றிய தகவல்கள் ஒபாமாவின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. உடனே ஒபாமா வெள்ளை மாளிகையில் இருந்து 2 பெட்டி "பீர் " பார்சல்களை வாஷிங்டனில் உள்ள கனடா தூதரகத்துக்கு அனுப்பி வைத்தார். அதில் ஒன்று வெள்ளை மாளிகை தோட்ட மலர்களில்  இருந்து சேகரிக்கப்பட்ட தேன் கலந்த "பீர் " ஒரு பெட்டியும், மற்றொரு தேன் கலந்த மற்றொரு பெட்டி பீர் பாட்டில்களும் அடங்கும். இதுகுறித்து ஒபாமா வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கனடா வீரர்கள் பெற்ற வெற்றிக்கு எனது வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார். இதுபோன்ற பந்தயத்தில் ஒபாமா தோற்றது இது முதல் முறையல்ல. ஏற்கனவே கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு வான்குவர் நகரில் நடந்த ஹாக்கி போட்டியின் போதும் கனடா அணியிடம் அமெரிக்கா தோற்றது. அப்போதும் பந்தயம் கட்டி தோற்ற ஒபாமா "பீர் " பாட்டில்களை அனுப்பி வைத்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்