முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாக்.கிடம் 5 முக்கிய தீவிரவாதிகள் பட்டியலை அமெரிக்கா கொடுத்தது

ஞாயிற்றுக்கிழமை, 29 மே 2011      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத்,மே.- 29 - பாகிஸ்தானிடம் இந்தியா கொடுத்துள்ள தீவிரவாதிகள் பட்டியலை மாதிரி அமெரிக்காவும் 5 முக்கிய சர்வதேச தீவிரவாதிகள் பட்டியலை அமெரிக்காவும் கொடுத்துள்ளது. இந்த 5 தீவிரவாதிகளையும் அமெரிக்காவிடம் ஒப்படைக்க வேண்டும் என்றம் பாகிஸ்தானுக்கு அமெரிக்கா கடும் நிபந்தனை விதித்துள்ளது. இந்தியாவில் நாசவேலையில் ஈடுபட்டுவிட்டு தப்பியோடும் கொடிய தீவிரவாதிகளை பாகிஸ்தான் விருந்துகொடுத்து வரவேற்கிறது. அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து சுதந்திரமாக உலாவர அனுமதிக்கிறது. இப்படி தப்பியோடிய 50 சர்வதேச தீவிரவாதிகள் பட்டியலை பாகிஸ்தானிடம் மத்திய அரசு கொடுத்து அவர்களை பிடித்து நாடு அனுப்புமாறும் கேட்டுக்கொண்டுள்ளது. இதேமாதிரி அமெரிக்காவும் சர்வதேச தீவிரவாத தலைவர்கள் 5 பேர் பட்டியலை பாகிஸ்தானிடம் கொடுத்துள்ளது. அந்த 5 தீவிரவாத தலைவர்களையும் பிடித்து தரவேண்டும். இல்லாவிட்டால் அவர்களை பிடிக்க எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தான் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றும் அமெரிக்கா கடுமையாக நிபந்தனை விதித்துள்ளது. இந்த தீவிரவாத தலைவர்கள் பட்டியல் குறித்து இஸ்லாமாபாத்தில் பாகிஸ்தான்-அமெரிக்க அதிகாரிகள் விரிவான முறையில் கடந்த 2 வாரங்களில் மூன்றுமுறை கூடி விவாதித்துள்ளனர். மேலும் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹில்லாரி கிளிண்டனும் பாகிஸ்தானுக்கு சென்று அந்தநாட்டு அதிபர் ஜர்தாரி, பிரதமர் கிலானி மற்றும் உயரதிகாரிகளுடந் ஆலோசனை நடத்தினார்.
இந்த 5 தீவிரவாத தலைவர்கள் பெயர்கள் அடங்கிய பட்டியலில் அல்கொய்தா தீவிரவாத இயக்க தலைவர் சுட்டுக்கொல்லப்பட்ட ஒசாமா பின்லேடனின் உதவியாளரும் துணைத்தலைவருமான அய்மான் அல்-ஜவஹிரி, ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த தலிபான் தீவிரவாத இயக்க தலைவன் முல்லா உமர்( இவன் கடந்த 10 தினங்களுக்கு முன்பு சுட்டுக்கொல்லப்பட்டான் என்று செய்தி வெளியாகியது.) தலிபான் இயக்க கமாண்டர் சிராஜ் ஹக்குனி, ஆதியா அப்தெல் ரகுமான்,( அல்கொய்தாவின் லிபியா நாட்டு பிரிவு ததலைவன்) ஆகியோர்கள் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இதில் முல்லா உமர் ஏற்கனவே சுட்டுக்கொல்லப்பட்டுவிட்டான் என்று செய்தி வெளியாகியது. ஆனால் இந்த பட்டியலில் அவன் பெயர் இடம் பெற்றிருப்பதால் முல்லா உமர் சுட்டுக்கொலை செய்யப்படவில்லை என்று தெரிகிறது. இந்த 5 தீவிரவாத தலைவர்களும் பாகிஸ்தான் எல்லையில் உலாவிக்கொண்டியிருக்கிறார்கள். மேலும் பாகிஸ்தான் ஒரு சொர்க்க பூமியாக இவர்களுக்கு இருக்கிறது. இந்த 5 தீவிரவாத தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறதா என்பதை அறியவே அமெரிக்க பட்டியலை கொடுத்துள்ளது. இதில் பாகிஸ்தானின் நிலை என்னவென்று தெரிந்துவிடும் என்றும் கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்