மீன்பிடி விசைப்படகு ஓட்டுனர் பயிற்சி சபாநாயகர் ஜெயக்குமார்- அமைச்சர் ஜெயபால் பங்கேற்பு

ஞாயிற்றுக்கிழமை, 29 மே 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, மே.- 29 - மீன்பிடி விசைப்படகு ஓட்டுனர் பயிற்சி சான்றிதழ் வழங்கும் விழாவில் சபாநாயகர் ஜெயக்குமார்- அமைச்சர் ஜெயபால் ஆகியோர் பங்கேற்பு 100 மீனவர்களுக்கு நிவாரண நிதியுதவி மற்றும் விபத்து  காப்பீட்டுத்திட்ட நிதியுதவி வழங்கினர். தமிழக முதல்வர் ஜெயலலிதா, மீன்படிப்பு தடை செய்யப்பட்ட காலத்தில் வழங்கப்படும் நிவாரண உதவித்தொகையை உயர்த்தி வழங்க ஆணையிட்டார். அதன்படி, மீன்பிடி தடைக்காலத்தில் மீனவ குடும்பங்களுக்கு வழங்கப்படும் நிவாரண உதவித்தொகை ரூ.1000-லிருந்து ரூ.2000-மாக உயர்த்தி வழங்க உடனடியாக அரசாணை வெளியிடப்பட்டது.
தமிழக முதல்வர் ஜெயலலிதா, 24.5.11 அன்று சென்னை தலைமை செயலகத்தில் இத்திட்டத்தினை தொடங்கிவைத்து, 13 கடலோர மாவட்டங்களை சேர்ந்த மீனவர்களுக்கு நிவாரண உதவி தொகையினை வழங்கினார்.
அதனை தொடர்ந்து நேற்று சென்னை இராயபுரத்தில் மீனவர்களுக்கு மீன்பிடி தடைக்கால நிவாரணம் மற்றும் மீன்பிடி விசைப்படகு ஓட்டுநர் பயிற்சி சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் சட்டப்பேரவை தலைவர் டி.ஜெயக்குமார் மற்றும் மீனவளத்துறை அமைச்சர் கே.ஏ.ஜெயபால் ஆகியோர் கலந்து கொண்டு 100 மீனவர்களுக்கு மீன்பிடி தடைக்கால நிவாரண காசோலைகளையும், 100 மீனவர்களுக்கு மீன்பிடி விசைப்படகு ஓட்டுநர் பயிற்சி சான்றிதழ்களையும், காணாமல் போன மீனவர்களின் குடும்பத்தினருக்கு தினப்படியாக நான்கு நபர்களுக்கு ரூ.1,69,000-மும், விபத்து காப்பீட்டு திட்டத்தின் கீழ் நான்கு நபர்களுக்கு தலா ரூ.50,000 வீதம் ரூ.2,00,000-த்திற்கான காசோலைகளையும் வழங்கினார்கள்.
இவ்விழாவில், ஆர்.கே. நகர் சட்டமன்ற உறுப்பினர் பி.வெற்றிவேல், மீன்துறை உதவி இயக்குநர்கள் என்.சேகர், கே.சிங்காரவேலன் உள்பட அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: