முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2 பயணிகளுக்கு டிக்கெட் கொடுத்தது ஈரான் தொழில் அதிபர்

செவ்வாய்க்கிழமை, 11 மார்ச் 2014      உலகம்
Image Unavailable

 

கோலாலம்பூர், மார்ச்.12 - மலேச்ய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பெய்ஜிங் நோக்கி 239 பயணிகளுடன் சென்ற மலேச்ய ஏர்லைன்ஸ் விமானம் வியட்நாம் அருகே தோ-ஷூ தீவுக்கு அருகே சென்ற போது மாயமானது. அதில் பயணம் செய்த 239 பேரின் கதி என்ந? என்று தெரியவில்லை.

வியட்நாம் அருகே உள்ள தோ-ஷூ தீவு அருகே விமானத்தின் உடைந்த பாகங்களை தேடும் பணி நடந்து வருகிறது. 4 நாட்கள் ஆகியும் இதுவரை விமானம் குறித்த தகவல் எதுவும் கிடைக்கவில்லை. தேடும் பணியில் மலேச்யா, சீனா, அமெரிக்கா, வியட்நாம், சிங்கப்பூர் உள்ளிட்ட 10 நாடுகள் ஈடுபட்டுள்ளன.

அந்நாடுகளின் 34 விமானங்கள், 40 கப்பல்கள் ஈடுபட்டுள்ளன. ஆனால் விமானத்தின் உடைந்த பாகங்களோ, பயணிகளின் உடல்களோ கிடைக்கவில்லை. முதலில் உடைந்த மலேசிய விமானத்தின் கதவு கண்டு பிடிக்கப்பட்டதாக வியட்நாம் கடற்படை தெரிவித்தது. அதை மலேசியா மறுத்து விட்டது. இதற்கிடையே மாயமான விமானத்தில் பயணம் செய்த ஒரு சீனகின் செல்போன் ஒலித்ததாகவும். ஆனால் அவர் எடுத்து பேசவில்லை என்றும் அவரது உறவுனர்கள் தெரிவித்தனர். 

எனவே அவரது நம்பரை தொடர்பு கொண்டு நவீன தொழில்நுட்பம் மூலம் விமானத்தை கண்டுபிடிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையே தாய்லாந்தில் திருட்டுப் பாஸ்போர்ட்டில் பயணம் செய்தது தெரியவந்தது. இவர்களுக்கு கிழக்கு தாய்லாந்தில் பட்டாயா என்ற இடத்தில் கடற்படை ஓட்டலில் உள்ள டிராவல் ஏஜென்சியில் 2 டிகெட்டுகள் எடுக்கப்பட்டுள்ளது. அவை ஏற்கனவே பாஸ்போர்ட்டு திருட்டு போன ஆஸ்த்ரியாவின் கிறிஸ்டியன் கோஸல் மற்றும் இத்தாலியின் லூகி மரால்டி ஆகியோரின் பெயர்களில் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த டிராவல்ஸ் ஏஜென்சியிடம் ஈரானை சேர்ந்த தொழிலத்பர் அலி என்பவர் தொடர்பு கொண்டு 2 டிகெட்டுகளை எடுத்துள்ளார். இந்த விவரம் தாய்லாந்து போலீஸ் மற்றும் தர்வதேச போலீஸ் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.

இவருக்கு தீவிரவாதிகளுடன் தொடர்பு இருக்குமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. ஏனெனில் மிக குறைந்த விலைக்கு டிக்கெட்டுகளை தரும்படி அவர் கேட்டதாக டிராவலஸ் ஏஜென்சியில் உரிமையாளர் பெஞ்சபோரன் குர்த்நைட் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்