செய்திதுறை அமைச்சர் செந்தமிழன் அட்வைஸ்

ஞாயிற்றுக்கிழமை, 29 மே 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை,மே.- 29 - முதலமைச்சரின் செயல் திட்டங்களை அனைவரும் பயன்பெறத்தக்க வகையில் கடைக்கோடி மக்கள் வரை எடுத்து செல்ல செய்தித் துறை அலுவலர்கள் முனைப்புடன் செயல்பட வேண்டும் என செய்தித் துறை அமைச்சர் ஜி.செந்தமிழன்  அலுவலர்களுக்கு அட்வைஸ் கொடுத்தார். செய்தி மக்கள் தொடர்புத் துறையின் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் தலைமைச் செயலக பழைய கூட்டரங்கில்  சய்தித் துறை அமைச்சர் ஜி.செந்தமிழன் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், தமிழ் வளர்ச்சி, அறநிலையங்கள் மற்றும் செய்தித் துறை  செயலாளர்   டி. என். ராமனாதன், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் மற்றும் அரசு சிறப்புச் செயலாளர் முனைவர்  மூ. இராசாராம்,    செய்தித் துறை  இணை   இயக்குநர் தங்க புகழேந்தி, துணை இயக்குநர்கள் எழிலழகன், எம்.அசோகன் மற்றும் உதவி இயக்குநர்கள், சென்னையில் செய்தித் துறையில் பணியாற்றும் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.​
இக்கூட்டத்தில், செய்தியாளர் நலன் காக்கும் திட்டங்கள், நினைவகங்கள், அரசு சார்பில் நடத்தப்படும் பொருட்காட்சிகள், விழாக்கள் வீடியோ படக்காட்சி,  நிர்வாக நடைமுறைகள்,   மற்றும் விளம்பரப் பணிகள் குறித்து, அமைச்சர் அவர்கள் விரிவாக ஆய்வு நடத்தினார்கள்.   
இக்கூட்டத்தில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் ஜி.செந்தமிழன் பேசும்போது தெரிவித்ததாவது:-
செய்தி மற்றும் விளம்பரத் துறை ஆய்வுப் பணிகள் கூட்டத்தினை நடத்திக் கொண்டிருக்கிற துறையின் இயக்குநர் முனைவர் மூ.இராஜாராம்,   துறையின் செயலாளர் டி.என்.இராமநாதன், வருகை தந்துள்ள  இணை இயக்குநர், துணை இயக்குநர்கள், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்கள் உங்கள் அனைவருக்கும் முதற்கண் என்னுடைய அன்புகலந்த வணக்கத்தினை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் துறையின் அமைச்சராக உங்களுடன் இணைந்து பணியாற்றக்கூடிய ஒரு நல்ல வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்த   தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பொற்பாதங்களுக்கு என்னுடைய நன்றியினை காணிக்கையாக்குகிறேன்.
 செய்தி மற்றும் விளம்பரத்துறை என்பது ஜெயலலிதாவின் தலைமையில் அமைந்திருக்கின்ற அரசின் திட்டங்களை,  அந்தத் திட்டங்கள் எப்படி எந்த அளவிற்கு மக்களுக்கு பயனளிக்கக்கூடிய  திட்டங்களாக இருக்கிறது.  அந்த திட்டங்களின் வாயிலாக மக்கள் எப்படியெல்லாம் பயன்பெறுகின்றார்கள் என்பதை இந்த நாட்டிற்கும், இந்த நாட்டு மக்களுக்கும் மற்ற துறைகளைவிட உடனடியாக  மக்களிடையே சென்று சேர்க்கக்கூடிய ஒரு துறையாகத்தான் நாம் இருக்கக்கூடிய இந்தத் துறைக்கு கிடைத்திருக்கக்கூடிய  பெரிய பெருமை.  
இந்தத் துறையின் செயல்பாடுகள் இந்த அரசின் வெற்றிக்கு ஒரு காரணமாக இருக்கும் என்ற நிலையினையொட்டி வருகை தந்துள்ள அத்துனை பணியாளர்களும்  ஏற்கனவே இந்தத் துறை எப்படி செயல்பட்டிருந்தாலும் நடந்தவை நடந்தவையாகவே இருக்கட்டும் இனி  நடப்பவை நல்லவையாக இருக்கட்டும் என்ற அடிப்படையிலே உங்கள் குழுவினுடைய முழு திறமையினையும் வெளிப்படுத்தி    மிக வேகமாக nullநீங்கள் அத்துனைபேரும் பணியாற்ற வேண்டும் என்று உங்களை கேட்டுக்கொள்கிறேன்.
 இன்றைக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா முதல்வராக பொறுப்பேற்றவுடனே மக்கள் நலம்பெறக்கூடிய வகையிலே மிக முத்தான 7 திட்டங்களுக்கு ஜெயலலிதா கையெழுத்திட்டு  இன்றைக்கு அதனை நடைமுறைப்படுத்துவதற்கு மிக வேகமாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.   
குறிப்பாக பார்ப்பேமானால்  மீனவர்களுக்கு மீன்பிடி தடைக்காலத்திலே ரூ.1000/-​ இருந்ததை ரூபாய் 2000/-​ மாக உயர்த்தி உடனடியாக அந்த மீனவ சமுதாயத்தை சேர்ந்த மீனவ மக்களை வரவழைத்து கொடுத்திருக்கின்றார்கள்.  அதேபோல்  ஜுன் 1-ம்தேதி முதல் எல்லா குடும்ப அட்டைதாரர்களுக்கும் 20 கிலோ அரிசி வழங்கும் திட்டம், அதேபோல் 10 ஆம் வகுப்பு வரை படித்த பெண்களுக்கு 25,000/-​ ரூபாய் பணம், 4 கிராம் தாலிக்கு தங்கம்.  பட்டம் அல்லது பட்டயம் படித்த பெண்களுக்கு 50,000/-​ ரூபாய் திருமண உதவி, 4 கிராம்  தங்கம்.  அதேபோல்  முதியோர் உதவித் தொகை 500 ரூபாயிலிருந்து 1000 ரூபாய் உயர்வு ,  மகப்பேறு விடுப்பு காலமாக 6 மாத கால உயர்வு போன்ற மகத்தான திட்டங்களை அறிவித்திருக்கின்றார்கள்.   
இது போன்ற திட்டங்கள் எல்லாம் மக்களுக்கு சென்றடைவதற்கு செய்தித் துறையின் பணி மிக முக்கிய பணியாக இருக்க வேண்டும்.  நம்முடைய பணி ஏதோ அரசின் திட்டங்கள், ஜெயலலிதாவுடைய அறிவுப்புகளை பத்திரிகைகளில் வரவழைத்துவிட்டு அதனை செய்தியாகிவிட்டது என்பதுமட்டுமல்லாமல்.
  தமிழ்நாட்டில் இருக்கின்ற கடைக்கோடி மக்களுக்கும்  அந்தத்    திட்டங்களின் பயன்களும், திட்டங்களும் சென்றடைய வேண்டிய வகையிலே நீnullங்கள் அத்துனைபேரும்  முழு மூச்சோடு, முனைப்போடு பணியாற்ற வேண்டுமென்று கேட்டு உங்களுடன் இருக்கின்ற ஒரு சகோதரனாக நானும் பணியாற்றுவேன், nullநீங்களும் அந்த எண்ணத்தோடு பணியாற்றி ஜெயலலிதாவின் தலைமையிலான அரசுக்கு  நல்ல பெயரை வாங்கித் தரவேண்டுமென்று இந்த நல்ல நேரத்திலே கேட்டு உங்களுக்கு நன்றி கூறி விடைபெறுகின்றேன். 

இதை ஷேர் செய்திடுங்கள்: