முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சேனல் 4-ன் இலங்கை போர்க்குற்றம் பற்றி புதிய வீடியோ

புதன்கிழமை, 12 மார்ச் 2014      உலகம்
Image Unavailable

 

கொழும்பு, மார்ச்.13 - இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே நடந்த இறுதி கட்ட போரின்போது மனித உரிமைகள் மிறப்பட்டன. அப்பாவி தமிழர்கள் சுமார் 70 ஆயிரம் பேர் சிங்கள் ராணுவத்தால் கொன்று குவிக்கப்பட்டனர்.

தமிழ் பெண்கள் ராணுவத்தினரால் கற்பழிக்கப்பட்டனர். எனவே, இலங்கை ராணுவத்தின் அட்டூழியங்கள் குறித்து வீடியோகளை இங்கிலாந்தின் சானல் 4 டெலிவிஷன் ஏற்பனவே வெளிபிட்டது. இது உலக மக்களிடம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. இந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு புதிய போர்குற்ற வீடியோகளை வெளியிட்டது.

6 நிமிட நேரம் ஒடக் கூறிய இந்த வீடியோவை டி.வி.நிரூபர் கல்லம் லெக்ரோ தயாரித்துள்ளார்.

சீருடை அணிந்த நபர்கள் அங்கு கிடக்கும் சடலங்கள் மீது ஏறி சிங்களத்தில் பேசிய படி மகிழ்ச்சியை கொண்டாடுவது வீடியோவில் பதிவாகியுள்ளது. இவை பெண் விடுதலைப் புலிகளின் சடலங்கள் என வீடியோ மீதான விளக்கத்தில் கூறப்பட்டுள்ளது. போர் நடந்த கடைசி இரண்டு அல்லது முன்று வருடங்களில் இந்த எடுக்கப்பட்டிருக்கலாம் எனறும் ராணுவ வீரர்   ஒருவர் தனது செல்போனில் இதைபதிவு செய்திருக்கலாம் என்றும் மெக்ரோ தெரிவித்துள்ளார்.

ஆனால் வழக்கம் போல் இந்த புதிய வீடியோ காட்சிகளை இலங்கை மறுத்துள்ளது. இது குறித்து ராணுவ செய்தி தொடர்பாளர் ருவான் வனிக சூரிய கூறியதாவது: இலங்கை அரசையும் ராணுவத்தையும் இழிவு படுத்தும் நோக்கில் சேனல் 4 நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. வெளிநாடுகளில் வாழும் விடுதலை புலிகள் ஆதரவு தமிழர் அமைப்புகளுடன் சேர்ந்து சேனல் 4 பிரிவினை கோர்க்கையை தொடர்ந்து ஆதரிக்கிறது என்று கூறியுள்ளார்.

இந்த வீடியோ உண்மையானது தான். இதில் எந்த வித சந்தேகம் இல்லை. வீடியோவை கொடுத்தவரையும் சந்தேகப்பட முடியாது. வீடியோ நிபுணர்களிடம் கொடுத்து ஆய்வு செய்து நம்பகதன்மையை உறுதி செய்துள்ளோம் என டி.வி. நிருபர் கல்லம் மெக்ரோ தெரிவித்துள்ளார். இறுதி கட்ட போரின் போது நடந்த மனித உரிமை மீரல்கள் பற்றி ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இலங்கை மீது அமெரிக்கா கண்டன தீர்மானம் கொண்டுவந்துள்ளது.

சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது. ஆனால் அதை தோற்கடிப்போம் என இலங்கை கூறி வருகிறது. இந்த நிலையில் போர்குற்றம் குறித்து புதிய வீடியோ இலங்கைக்கு கடும் நேருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்