முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மானாமதுரை அருகே அதிகாலை மரத்தில் கார் மோதி ஜோதிடர் உட்பட 5 பேர் பலி 9 பேர் படுகாயம்

ஞாயிற்றுக்கிழமை, 29 மே 2011      தமிழகம்
Image Unavailable

சிவகங்கை மே.- 29 - குழந்தைகளுக்கு தோஷம் கழிப்பதற்காக குடும்பத்துடன் ராமேஸ்வரம் சென்றவர்களின் கார் நேற்று அதிகாலை மரத்தில் மோதியதில் 3 வயது குழந்தை உள்பட ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் மேலும் 9 பேர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகேயுள்ள காந்தி நகரைச் சேர்ந்த காங்கிரஸ் தொழிற்சங்க பிரமுகர் மூர்த்தி(40) அரசு போக்குவரத்துக் கழகத்தில் டிரைவராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி வேடசந்தூர் வட்டார நுகர்வோர் பாதுகாப்பு நலச்சங்க இணைச்செயலாளர் செல்வம்(35). மூர்த்தியின் நண்பர் மகேஸ்வரன் ஆந்திர மாநிலம் மெகபூப் நகர் நாராயணபேட்டையில் வசிக்கிறார். தனது குடும்பத்துடன் சமீபத்தில் வேடசந்தூர் வந்திருந்தார். மகேஸ்வரனுடன் அவரது நண்பர் பசவராஜூம்(55) வந்திருந்தார். மகேஸ்வரனின் குழந்தைகளுக்கு கிரகம் சரியில்லை, உடனடியாக ராமேஸ்வரம், குழந்தைகளை அழைத்துக் கொண்டு ராமேஸ்வரம் செல்ல முடிவெடுத்தார். அவருடன் மூர்த்தி தம்பதி மற்றும் பசவராஜ் குடும்பத்தினரும் ராமேஸ்வரம் செல்ல முடிவெடுத்தனர். தோஷம் கழிப்பதற்காக, ஜோதிடர் கோபாலையும் அழைத்துக்கொண்டு வாடகை காரில் நேற்றுமாலை வேடசந்தூரில் இருந்து ராமேஸ்வரம் கிளம்பினார். காரை டிரைவர் ராஜசேகரன்(22) ஓட்டினார். நேற்று அதிகாலை 2.45 மணியளவில், மதுரை-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில், மானாமுதுரை அருகே ஒத்தக்கடை விலக்கு அருகே கார், சாலையோரம் இருந்த புளியமரத்தில் பலத்த வேகத்தில் மோதியது. மோதிய வேகத்தில் இருந்த மூர்த்தி செல்வம், 3வயது குழந்தை அட்சயா, ஜோதிடர் கோபால், உறவினர் கவுதம்(27) ஆகிய ஜந்து பேரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். காருக்குள், இடிபாடுகளுக்கு இடையே சிக்கிக்கொண்டவர்கள் அதிலிருந்து தப்ப முடியாமல் உயிருக்குப் போராடியபடி கூக்குரல் எழுப்பினார். அப்போது, அந்த வழியாக மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை ஆம்புலான்ஸ் டிரைவர் வெங்கடேஷ், தனி நபராக உயிருக்குப்போராடியவர்களை மீட்டர். அவர் கொடுத்த தகவலையடுத்து, 108 ஆம்புலன்ஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். படுகாயங்களுடன் இருந்தவர்கள் ஆம்புலன்ஸ் டிரைவர் வெங்கடேஷ் மற்றும் 108 வாகனம் மூலம் மானாமதுரை அரசு மருத்துவமனைக்குக்கொண்டு செல்லப்பட்டனர். தக்க தருணத்தில் அவர்கள் உதவிக்கு வந்தால், காருக்குள் போராடிக் கொண்டிருந்த பசவராஜ்(55) சஞ்சய்(7) பிரணவி(3), கார்த்தியாயினி(5), மகேஸ்வரன்(45), பத்மா(40), அன்னபூரணா(22), ராமசாமி(55) ஆகிய 9 பேரும் மீட்கப்பட்டனர். இவர்களுக்கு மானாமதுரை அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னர், ஆபத்தான நிலையில் இருந்த ஐந்து பேரை மதுரை தனியார் மருத்துவமனைக்குக்கொண்டு செல்லப்பட்டனர். குழந்தைகளுக்கு தோஷம் கழிப்பதற்காக குடும்பத்துடன் ராமேஸ்வரம் சென்றவர்களது வாகனம் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் ஐந்து பேர் பலியான சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த விபத்தில் இறந்த ஜோதிடர் கோபால் திண்டுக்கல் மாவட்ட தே.மு.தி.க வர்த்தக அணி துணை செயலாளர் என்பது குறிப்பிடதக்கது.  
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony