முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தங்கம் ஒரு பவுன் விலை ரூ.17 ஆயிரத்தை தாண்டியது

ஞாயிற்றுக்கிழமை, 29 மே 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை,மே.- 29 - தங்கம் ஒரு பவுன்விலை ரூ.17 ஆயிரத்தை தாண்டியது. ஒரு கிராம் தங்கம் விலை நேற்று ரூ.2 ஆயிரத்து 126 ஆக உயர்ந்தது. தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. சுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பவுன் விலை ரூ. 5 ஆயிரமாகத்தான் இருந்தது. ஆனால் பின்னர் படிப்படியாக விலை உயர்ந்து இன்று அது 17 ஆயிரத்தை தாண்டிவிட்டது. கடந்த மார்ச் மாதம் கூட ஒரு கிராம் ரூ.1 ஆயிரத்து 938 ஆக இருந்தது. ஆனால் இரண்டே மாதங்களில் கிடுகிடுவென உயர்ந்து தற்போது ஒரு கிராம் ரூ.2 ஆயிரத்து 126 ஆக உள்ளது. அதாவது ஒரு பவுன் விலை நேற்றை நிலவரப்படி ரூ. 17 ஆயிரத்தையும் தாண்டிவிட்டது. இதனால் பொதுமக்கள் குறிப்பாக ஏழைகள் இனி தங்கத்தை தொட்டுக்கூட பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நடுத்தர மக்கள் தங்கள் பெண்களை கட்டிக்கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தங்கத்தில் வசதி உள்ளவர்கள் அதிக அளவு முதலீடு செய்வதால் விலை உயர்வதாக கூறப்படுகிறது. இந்த விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசால் கூட முடியவில்லை. திருமண காலத்தில் தளங்கத்தின் விலை மேலும் உயரும் என்று அஞ்சப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்