முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லாலு மீதான குற்றச்சாட்டுகளை தள்ளுபடி செய்ய பரிந்துரை

வெள்ளிக்கிழமை, 14 மார்ச் 2014      ஊழல்
Image Unavailable

 

புதுடெல்லி, மார்ச்.15 - பிகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் மீது நிலுவையில் உள்ள கால்நடை தீவன ஊழல் தள்ளுபடி செய்ய சி.பி.ஐ. இயக்குநர் ரஞ்சித் சின்ஹா பிரந்துரை செய்துள்ளார்.

இந்த  வழக்கின் விசாரணை அதிகாரிகளின் கருத்துக்களுக்கு எதிராக ரஞ்சித் சின்ஹாவின் பரிந்துரை அமைந்துள்ளது. இது போன்ற பிரச்னைகளுக்கு அட்டார்னி ஜெனரல் தலையிட்டு தீர்க்க வேண்டும் என்ற விதிமுறை இருந்த போதிலும், ரஞ்சித் சின்ஹா இந்த விவகாரத்தை சொலிசிட்டர் ஜெனரலிடம் குறிப்பிட்டு அனுப்பியுள்ளதால் இந்த விவகாரம் மேலும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் லாலு பிரசாத்துக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கி ஜார்க்கண்ட நீதி மன்றம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தீர்ப்பு வழங்கியது.  பிகார் சிறையில் அடைக்கப்பட்ட லாலு, தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார். கால்நடை தீவன ஊழல் தொடர்பாக லாலு மீது மேலும் 3 வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. இது தொடர்பாக சொலிசிட்டர் ஜெனரலுக்கு சி.பி.ஐ. இயக்குநர் ரஞ்சித் சின்ஹா கடந்த பிப்ரவரி 26 ம் தேதி எழுதியுள்ள கடிதத்தில், லாலு மீது நிலுவையில் உள்ள கால்நடை தீவன வழக்குகளின் குற்றச்சாட்டுகளும், குற்றம் சாட்டப்பட்டவர்களின் பட்டியலும், குற்றச் சாட்டகளுக்கான ஆதாரங்களும் ஏற்கனவே தண்டனை வழங்கப்பட்ட கால்நடைத் தீவன் ஊழல் வழக்குடன் ஒத்து போகின்றன. ஆகையால், ஒரு வழக்கில் தண்டனை வழங்கப்பட்ட ஒருவருக்கு அதே குற்றத்துக்காக மற்ற வழக்குகளில் மீண்டும் தண்டனை வழங்கக் கூடாது. ஆகையால், லாலு மீது நிலுவையில் உள்ள கால்நடைத் தீவன ஊழல் வழக்குகளின் குற்றச்சாட்டுகளை தள்ளுபடி செய்ய வேண்டும்  என்பது எனது கருத்து. இதற்கு எதிராக பாட்னா சி.பி.ஐ. பிரிவு உயர் அதிகாரிகள், சி.பி.ஐ.யின் தண்டனை பிரிவு இயக்குநர் ஓ.பி.வர்மா ஆகியோர் தெரிவித்துள்ள கருத்துகளில் எனக்கு உடன்பாடு இல்லை. இந்த விவகாரத்தில் உள்ள சட்டச் சிக்கல்கள் குறித்து உங்கள் ( சொலிசிட்டர் ஜெனரல் ) கருத்துகளை தெரிவிக்க வேண்டும் என்று சின்ஹா தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்