தண்டனையை எதிர்த்து கசாப் மேல்முறையீடு

Kasab 0

மும்பை,பிப்.25 - மும்பை தாக்குதல் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட அஜ்மல் கசாப் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய முடிவு செய்துள்ளார். இந்த தகவலை அவரது வழக்கறிஞர் தெரிவித்தார். மும்பை தாக்குதல் வழக்கில் விசாரணை நீதிபதிகள் கசாப்புக்கு அளித்த மரண தண்டனை தீர்ப்பை கடந்த பிப்ரவரி 21 ம் தேதி மும்பை ஐகோர்ட் உறுதி செய்தது. இந்த தீர்ப்பு வந்த பின் கசாப்பின் வழக்கறிஞரான பர்ஹானா ஷா சிறையில் கசாப்பை சந்தித்தார். பின்னர் அவர் கூறுகையில், நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய கசாப்புக்கு உரிமை இருக்கிறது என்று எடுத்து கூறினேன். அமைதியாக நான் கூறுவதை கேட்ட பின், சரி, நாம் உச்சநீதிமன்றத்துக்கு போகலாம் என்று கூறினார். எனவே மும்பை ஐகோர்ட் அளித்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்படும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ