முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் இன்று துவக்கம்

சனிக்கிழமை, 15 மார்ச் 2014      விளையாட்டு
Image Unavailable

 

டாக்கா, மார்ச். 16 - வங்காளதேசத்தில் 16 நாடுகள் பங்கேற்கும் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று கோலாகலமாக துவங்க இருக்கிறது. கிரிக்கெட் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த போட்டி டி _ 20 போட்டியாகும். ஐ.சி.சி.       

(சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) 2007 _ம் ஆண்டு 20 ஓவர் உலகக் கோப்பையை அறிமுகப்படுத்தியது. 

தென் ஆப்பிரிக்காவில் நடந்த முதலாவது ஐ.சி.சி. 20 ஓவர் உலகக் கோப்பையை தோனி தலைமையிலான இந்திய அணி கைப்பற்றியது. 

2009 ம் ஆண்டு பாகிஸ்தானும், 2010 _ம் ஆண்டு இங்கிலாந்தும், 2012 ம் ஆண்டு மேற்கு இந்தியத்தீவுகள் அணியும்உலகக் கோப்பையை வென்றன. 

5_வது 20 ஓவர் உலகக் கோப்பையை வங்காளதேசம் நடத்துகிறது. இந்தப் போட்டி இன்று (16 ம் தேதி ) தொடங்குகிறது. ஏப்ரல் 6 ம் தேதி வரை இந்தப் போட்டி நடைபெறுகிறது. 

இந்த உலகக் கோப்பை போட்டியில் 16 நாடுகள் சாம்பியன் பட்டைத்தைக் கைப்பற்ற களம் இறங்குகின்றன. ஐ.சி.சி. தரவரிசையில் முதல் 8 இடங்களில் உள்ள அணிகள் நேரடியாக முதன்மை சுற்றில் விளையாடும். 

மற்ற 8 அணிகள் தகுதி சுற்றில் விளையாடும். இவை 2 பிரிவாக பிரிக்கப்பட்டு உள்ளது. ஏ பிரிவில் போட்டியை நடத்தும் வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங், நேபாளம் ஆகியஅணிகளும், பி பிரிவில் ஜிம்பாப்வே, அயர்லாந்து, நெதர்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய அணிகளும் இடம் பெற்று உள்ளன. 

ஒவ்வொரு அணியும் தங்கள்பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இரண்டு பிரிவிலும் முதல் இடத்தை பிடிக்கும் அணி முதன்மை சுற்றுக்கு தகுதி பெறும். 

முதன்மை சுற்றில் விளையாடும் 10 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டுஉள்ளது. ஒவ்வொரு பிரிவிலும் 5அணிகள் இடம் பெற்று உள்ளன. இதில் இடம் பெற்றுள்ள அணிகள்விபரம் _ 

குருப் 1 _ தென் ஆப்பிரிக்கா, இலங்கை, இங்கிலாந்து, நியூசிலாந்து, தகுதிச்சுற்றில் வெல்லும் அணி (பி பிரிவில் முதல் இடத்தை பிடிக்கும் அணி). 

குரூப் 2 _ இந்தியா, ஆஸ்திரேலியா, மேற்கு இந்தியத் தீவுகள் அணி, பாகிஸ்தான், தகுதிச்சுற்றில் வெற்றி பெறும் அணி( ஏ பிரிவில் முதல் இடத்தை பிடிக்கும் அணி). 

ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா 1 முறை மோத வேண்டும். லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் இரண்டு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் நாடுகள்

அரை இறுதிக்கு தகுதி பெறும். 

இந்த உலகக் கோப்பையில் மொத்தம் 35 ஆட்டங்கள் நடக்கிறது. தகுதி சுற்று 12  ஆட்டங்களும், முதன்மை சுற்று 20 ஆட்டங்களும் நடைபெற இருக்கிறது. 

இன்றைய தொடக்க நாளில் 2 ஆட்டம் நடைபெறுகிறது. ஏ பிரிவில் உள்ள வங்காளதேசம் _ ஆப்கானிஸ்தான் , ஹாங்காங் _ நேபாளம் அணிகள் மோதுகின்றன. 

21 ம் தேதி வரை தகுதி சுற்று நடக்கிறது. அன்றே முதன்மை சுற்றும் தொடங்குகிறது. ஏப்ரல் 1 ம்தேதியுடன் லீக் ஆட்டம் முடிகிறது. 3 மற்றும் 4 ம் தேதிஅரை இறுதியும், ஏப்ரல் 6 ம் தேதி இறுதிப் போட்டியும் நடைபெறுகிறது. 

2007 _ம் ஆண்டு சாம்பியனான இந்திய அணி கடந்த 3 உலகக் கோப்பையிலும் அரை இறுதிக்கு கூட நுழையவில்லை. 

இதனால் தோனி தலைமையிலான இந்திய அணி இந்த உலகக் கோப்பையிலாவது முத்திரை பதிக்குமா என்ற எதிர்பார்ப்பு 

அனைவரிடமும் ஏற்பட்டுள்ளது. 

இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானை 21_ம் தேதி சந்திக்கிறது. 23 _ம் தேதி மே.இ.தீவுடனும், 28 _ம் தேதி தகுதி சுற்றில் ஏ பிரிவில் முதல் இடத்தை பிடிக்கும் அணியுடனும், 30 _ம்தேதி ஆஸ்திரேலியாவுடனும் மோதுகிறது. 

முன்னதாக இந்திய அணி 2 பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது. 17 _ம் தேதி

இலங்கையுடனும், 19 _ம்தேதி இங்கிலாந்துடனும் பயிற்சி போட்டியில் ஆடுகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்