முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தகுதிச் சுற்று: வங்கம் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது

ஞாயிற்றுக்கிழமை, 16 மார்ச் 2014      விளையாட்டு
Image Unavailable

 

டாக்கா, மார்ச். 17 - 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின்முதல் தகுதிச் சுற்று ஆட்டத்தில் வங்காளதேச அணி 9 விக்கெட்வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணியை தோற்கடித்தது. 

16 நாடுகள் பங்கேற்கும் டி _ 20 உலகக் கோப்பை வங்காளதேசத்தில் நேற்று கோலாகலாமாக துவங்கியது. இதில் தகுதிச் சுற்று ஆட்டங்கள் முதலில் நடக்கின்றன. 

நேற்று நடந்த முதல் தகுதிச் சுற்று ஆட்டத்தில் போட்டியை நடத்தும் வங்காளதேச அணியும், ஆப்கானிஸ்தான் அணியும் மோதின. 

இந்தப் போட்டியில் முதலில் களம் இறங்கிய முகம்மது தலைமையிலான 

ஆப்கானிஸ்தான்,வங்கதேச பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. இறுதியில் அந்த அணி 17.1 ஓவரில் 72 

ரன்னில் ஆல் அவுட்டானது. ஷாகிப் அல் ஹசன் 8 ரன்னைக் கொடுத்து 3 விக்கெட் எடுத்தார். 

73 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் ஆடிய வங்கதேச அணி 12.3 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 78 ரன்னை எடுத்தது. 

இதனால் இந்த முதல்தகுதிச் சுற்று ஆட்டத்தில் கேப்டன் முஸ்பிகர் ரகீம் தலைமையிலான வங்கதேச அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணி தரப்பில்துவக்க வீரர் அனாமுல் ஹக் 44 ரன் எடுத்தார். 

சமீபத்தில் நடந்த ஆசிய கோப்பை போட்டியில் வங்காளதேச அணி ஆப்கானிஸ்தானிடம் தோற்றது. அதற்கு பழி தீர்க்கும் வகையில் இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றுள்ளது. 

வங்காளதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இந்த முதல் தகுதிச் சுற்று ஆட்டம் மாலை 3 மணிக்குதுவங்கியது. 

பின்பு இரவு 7 மணிக்கு நடந்த 2_வது ஆட்டத்தில் அட்சின் தலைமையிலான ஹாங்காங் அணியும், பராஸ்கட்சா தலைமையிலான நேபாளம் அணியும் மோதின. 

20 ஓவர் உலகக் கோப்பையில் 16 நாடுகள் பங்கேற்கின்றன. தரவரிசையில் முதல் 8 இடங்களில் உள்ள அணிகள் நேரடியாக முதன்மை சுற்றில் விளையாடும். 

மீதியுள்ள 8 அணிகள் தகுதிச் சுற்றில் விளையாடும். இதில் இருந்து 2 அணிகல் முதன்மை சுற்றுக்கு தேர்வு பெறும். 

தகுதிச் சுற்றில் ஆடும் 8 அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. ஏ பிரிவில் வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங், நேபாளம் அணிகள் இடம் பெற்று உள்ளன. 

பி பிரிவில் ஜிம்பாப்வே, அயர்லாந்து, நெதர்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நான்கு அணிகள்  இடம் பெற்று உள்ளன. 

இதில் ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா 1 முறை மோத வேண்டும். லீக் முடிவில் இரண்டு பிரிவிலும் முதல் இடத்தைப் பிடிக்கும் அணிகள் சூப்பர் 10 என்று அழைக்கப்படும் முதன்மை சுற்றுக்கு தகுதி பெறும். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்