முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கனிமொழி கைது விவகாரம்: மன்மோகன்சிங் மழுப்பல் பதில்

திங்கட்கிழமை, 30 மே 2011      ஊழல்
Image Unavailable

புது டெல்லி,மே.- 30 - கனிமொழி கைது விவகாரம் தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பிரதமர் மன்மோகன்சிங் மழுப்பலாக பதில் அளித்தார்.  எத்தியோப்பியா, தான்சானியா பயணத்தை முடித்து விட்டு டெல்லி திரும்பும் வழியில் விமானத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் பிரதமர். அப்போது அவரிடம் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் அ.தி.மு.க.வை சேர்க்கும் திட்டம் ஏதும் உள்ளதா என கேட்கப்பட்டது. இப்போது வரை ஐக்கிய முற்போக்கு  கூட்டணியில்தான் தி.மு.க. நீடிக்கிறது. அதில் எந்த மாற்றமும் இல்லை என்று பிரதமர் பதிலளித்தார்.
கனிமொழி எம்.பி. கைது செய்யப்பட்டது குறித்து நிருபர்கள் கேட்டதற்கு, 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு குறித்து சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரம் நீதிமன்ற விசாரணையில் இருப்பதால் என்னால் எதுவும் கூற முடியாது என்றார். மேற்கு வங்கம், கேரளத்தில் இடதுசாரி முன்னணி ஆட்சியை இழந்திருப்பது குறித்து பிரதமரிடம் கேட்ட போது,இந்த விஷயத்தில் எனக்கு நிபுணத்துவம் இல்லை என்றார். அண்மையில் நடைபெற்ற 5 மாநில சட்டசபை தேர்தலில் மேற்கு வங்கத்திலும், கேரளத்திலும் இடதுசாரிகள் ஆட்சிக்கு எதிராக மக்கள் வாக்களித்துள்ளனர். இது மக்கள் அளித்த தீர்ப்பு என்றார்.
அரசு திட்டங்களுக்காக நிலம் கையகப்படுத்துவது மிகவும் சிக்கலான விவகாரம். இந்த பிரச்சினைக்கு தீர்வு காண சட்ட மசோதா தயாரிக்கப்பட்டுள்ளது. வரும் மழைக் கால கூட்டத்தொடரில் இந்த மசோதாவை நிறைவேற்ற உறுதிபூண்டுள்ளோம். நொய்டா உள்ளிட்ட பகுதிகளில் நிலம் கையகப்படுத்தப்பட்டிருப்பதை எதிர்த்து விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் குறித்து அக்கறை கொண்டுள்ளோம்.
பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஜிகாதி அமைப்புகளால் இந்தியா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதே பயங்கரவாதம் பாகிஸ்தானையும் திருப்பி தாக்கும் என்பதை அந்நாடு உணர வேண்டும். அண்மையில் கராச்சி கடற்படை தளத்தில் நடைபெற்ற தாக்குதலை படிப்பினையாக எடுத்துக் கொண்டு இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத அமைப்புகளை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மும்பை தாக்குதல் சம்பவத்தின் முக்கிய குற்றவாளி டேவிட் ஹெட்லி அமெரிக்காவின் சிகாகோ நீதிமன்றத்தில் அளித்துள்ள வாக்குமூலத்தில் புதிதாக எதையும் கூறவில்லை.
மும்பை தாக்குதலில் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. க்கு தொடர்பு இருக்கிறது என்பது உலகறிந்த உண்மை. டேவிட் ஹெட்லி மீதான விசாரணை முடித்த பின்னர் அவரை இந்தியா கொண்டு வந்து விசாரணை நடத்துவது குறித்து பரிசீலிக்கப்படும். அதிகாரத்தை அனுபவித்து வரும் மேற்கத்திய நாடுகள் அதை விட்டு தர தயாராக இல்லை. எனினும் ஐ.எம்.எப். தலைவர் தேர்வில் வெளிப்படை தன்மையை கடைப்பிடிக்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தி வருகிறது என்று பிரதமர் மன்மோகன்சிங் கூறினார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago