முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியன் வெல்ஸ் டென்னிஸ்: ஜோகோவிக் சாம்பியன்

திங்கட்கிழமை, 17 மார்ச் 2014      விளையாட்டு
Image Unavailable

 

நியூயார்க், மார்ச். 18 - அமெரிக்காவில் நடைபெற்ற இந்தியன் வெல்ஸ் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவில் செர்பிய வீரர் நோவக் ஜோகோவிக் சாம்பியன் பட்டம் வென்றார். 

ஆடவருக்கான ஏ.டி.பி. சுற்றுப் பயண டென்னிஸ் போட்டிகளில் ஒன்றான இந்தியன் வெல்ஸ் டென்னிஸ் போட்டி கடந்த சி ல நாட்களாக நடந்தது. 

இந்தப் போட்டியில் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்ற முன்னணி வீரர்கள்

களம் இறங்கினர். கடந்த ஒரு வாரமாக நடந்த இந்தப் போட்டி இறுதிக் கட்டத்தை அடைந்தது. 

ஆடவருக்கான ஒற்றையர் பிரிவின் இறுதிச்சுற்றில் பட்டத்தைக் கைப்பற்ற ஜோகோவிக்கும், சுவிஸ் வீரர் ரோஜர் பெடரரும் மோதினர். 

இந்த ஆட்டம் தொடக்கம் முதலே பரபரப்பாக இருந்தது. முதல்செட்டில் பெடரர் 6_3 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றார். 

இதனால் 2_வது செட்டில் ஜோகோவிக்கின் ஆட்டம் அனல் பறந்தது. இந்த செட்டடை செர்பிய வீரர் ஜோகோவிக் 6_3 என்ற புள்ளி கணக்கில் கைப்பற்றினார். 

இருவரும் தலா ஒரு செட்டை வென்றதால் ஆடட்டத்தை தீர்மானிக்கும் 3_வது செட் மிகுந்த பரபரப்பிற்கிடையே நடைபெற்றது. 

இருவரும் சளைக்காமல் போராடி தங்கள்திறமையை காட்டினர். இருவரும் சமபுள்ளிகள் எடுத்ததால் டைபிரேக்கர் முறை கடைபிடிக்கப்பட்டது. 

இதில் 7_3 என்ற புள்ளி கணக்கில் செர்பிய நட்சத்திர வீரரான ஜோகோவிக் வெற்றி பெற்றார். இதையடுத்து ஜோகோவிக் 3_6, 6_3, 7_6(7) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் பெற்றார். 

இந்த வெற்றி குறித்து ஜோகோவிக் கூறுகையில், இந்த சாதனையை பெற்றது சந்தோஷமாக உள்ளது. நான் அரை இறுதியில் வெற்றி  பெற்ற போது, இறுதி போட்டியில் சில புள்ளிகள் வித்தியாசத்திலேயே வெற்றிகிடைக்கும் என்று கூறினேன். அதன்படியே நடந்து விட்டது என்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்