ராமேஸ்வரம் கடலில் அலைகடலென மீனவர்கள் மீன்பிடிக்க செல்கிறார்கள்

திங்கட்கிழமை, 30 மே 2011      தமிழகம்
Image Unavailable

ராமேஸ்வரம், மே.- 30 - ராமேஸ்வரம் கடலில் மீனவர்கள் 10ஆயிரம் பேர் இன்று அலைகடலென மீன் பிடிக்க செல்கின்றனர். தமிழகம் முழுவதும் மீன்களின் இனப்பெருக்கம் காரணமாக கடந்த மாதம் 16ம் தேதி முதல் நேற்று வரை மீன்பிடிக்க தடை அமுலில் இருந்தது. இந்த தடை காலம் நேற்று முடிவடைந்ததால் இன்று முதல் ராமேஸ்வரம், மண்டபம், பாம்பன் பகுதியைச் சேர்ந்த 10ஆயிரம் மீனவர்கள் 1500 விசைப்படகுகளில் மீன்பிடிக்கச்செல்கிறார்கள். இன்று காலை 6 மணிக்கு மீனவர்களுக்கு மீன்பிடிப்பதற்கான டோக்கன் வழங்கப்படுகிறது. இதுகுறித்து மீனவர்கள் கூறியதாவது, மீன்பிடி தடைகாலம் நேற்றுடன்(29.05.2011) முடிவடைந்தது. இந்த தடை காலத்தில் விசைப்படகுகளை சரிசெய்யும் பணி நடந்தது. 45 நாட்களுக்கு பிறகு கடலுக்குள் செல்வதால் அதிக அளவில் மீன்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம் என்று கூறினார்கள்.
மீன்பிடி தடைகாலம் அமுலில் இருந்ததால் மீன் விலை கடந்த ஒரு மாதமாக உயர்ந்து காணப்பட்டது. இன்று முதல் மீனவர்கள் விசைப்படகுகளில் கடலுக்குள் மீன்பிடிக்கச்செல்வதால் மீன்விலை குறையும் என்று பொதுமக்கள் எதிர்பார்கிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்: