முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மோடியை ஊழலற்றவர் என தெரிவிக்கவில்லை: விக்கிலீக்ஸ்

செவ்வாய்க்கிழமை, 18 மார்ச் 2014      ஊழல்
Image Unavailable

 

புது டெல்லி, மார்ச் 19 - பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடியை ஊழலற்றவர் என கூறவில்லை என்று விக்கிலீக்ஸ் இணையத்தளம் தெரிவித்துள்ளது.

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பாஜக தொண்டர்கள் சிலர் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர். அதில் விக்கிலீக்ஸ் இணையதள நிறுவனர் அசாங்கே, நரேந்திர மோடியை கண்டு அமெரிக்கா பயப்படுகிறது. அதற்கு அவர் ஊழலற்றவராக இருப்பதே காரணம் என தெரிவித்ததாக வாசகங்கள் இட்ம்பெற்றுள்ளன. இதற்கு விக்கிலீகஸ் இணையதளம் மறுப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக டுவிட்டர் இணையதளத்தில் விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மோடி பிரபலமானவராக இருக்கிறார். அதற்கு ஊழலற்றவர் என்று அவரை மக்கள் கருதுவதே காரணம், என்று தான் தெரிவித்தோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவர் முக்தர் அப்பாஸ் நக்வி, மோடி தொடர்பாக விக்கிஸீக்ஸ் அல்லது அசாங்கேயிடம் இருந்து சான்றிதழ் எதுவும் எங்களுக்கு தேவையில்லை என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்