முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காங்., 3வது பட்டியல்: அசாருதீன் ராஜஸ்தானில் போட்டி

புதன்கிழமை, 19 மார்ச் 2014      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, மார்ச் 20 - கபில் சிபல், அஜய்மக்கான் உள்பட 58 பேர் கொண்ட மூன்றாவது வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.இதில் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் முகமது அசாருதீன் தொகுதி மாறி போட்டியிடுகிறார்.

காங்கிரஸ் கட்சி வரும் நாடாளுமன்ற தொகுதிக்கான வேட்பாளர்களை அறிவித்து வருகிறது.காங்கிரசின் இரண்டு பட்டியலில் இடம் பெறாத கபில் சிபல், சச்சின்பைலட், ஆஜய்மக்கான், உள்பட பலருக்கு மூன்றாவது பட்டியலில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில், கபில் சிபல் சாந்திசவுக் பகுதியில் இருந்து போட்டியிடுகிறார். மேலும், முன்னாள் முதல்வர் ஷிலா தீட்சித்தின் மகன் தந்தீப் திட்சித்-கிழக்கு டில்லி அஜய்மக்கான்-புது டெல்லி, கிருஷ்ணாதிரத்- வடமேற்கு டெல்லி, சி.பி.ஜோஷி-ஜெயபூர் ரூரல், சச்சின்பைலட்-அஜ்மீர் ஆகியோர் வேட்பாளர்களாக் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது அசாருதீன் தற்பேது உத்தரபிரதேச மாநிலம் மொரதாபாத் எம்பியாக இருந்து வருகிறார். அவருக்கு ராஜஸ்தான் மாநிலம் டாங்-சவாய் மாதோபூர் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியில் சமிபத்தில் இணைந்த நாராயணசாமி, பெங்களூரு வடக்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த மூன்றாவது பட்டியலையும் சேர்த்து காங்கிரஸ் கட்சி 318 வேட்பாளர்களை அறிவித்துள்ளது. எனினும், சமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் யாரும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்