முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

239 பயணிகளுடன் மலேசிய விமானி தற்கொலையா?

புதன்கிழமை, 19 மார்ச் 2014      உலகம்
Image Unavailable

 

கோலாலம்பூர், மார்ச்.20 - கோலாலம்பூரில் இருந்து சீனா தலைநகர் பெயஜிங்க்கு சென்ற மலேசிய விமானம் கடந்த 8-ம் தேதி திடீரென மாயமானது அதில் பயணம் செய்த 239 பேரின் கதி என்ன என்று தெரியவில்லை.

விமானம் மாயமாகி 11 நாட்களாகியும் அது பற்றிய தகவல் தெரியவில்லை. விமானம் கடலில் விழுந்த தா? அல்லது தீவிரவாதிகளால் கடத்தப்பட்டதா ? அல்லது எங்காவது விழுந்து நொறுங்கி விட்டதா ? என விசாரணை நடந்து வருகிறது. இதற்கிடையே மலேசிய உளவுத்துறை மாயமான விமானம் குறித்து 13 கோணங்களில் விசாரணை நடந்துள்ளது. விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது வித்தியம் பாட்டரியில் இருந்து தீப்பொறி ஏற்பட்டு அது விமானத்தின் ஏற்றப்பட்டிருந்த சரக்கு பகுதியில் பிடித்து விபத்து இருக்கலாம். அல்லது விமானத்தில் பயணம் செய்த நபர் ஒருவர் விமானியின் " காக்பிட்" பகுதிக்கு சென்று கடத்தலில் ஈடுபட்டிருக்கலாம். ஒரு வேளை கடத்தியிருந்தால் அவர்களின் கோரிக்கை என்ன என தெரியவில்லை. ஒருவேளை விமானம் குண்டு வைத்து தகர்க்கப்பட்டிருக்கலாம்.  அவ்வாறு நடத்திருந்தால் 35 ஆயிரம் அடி உயரத்தில் விழுந்த விமானத்தின் உடைந்த பாகங்கள் மற்றும் எரிபொருள் ( பெட்ரோல் ) துகள்கள் கடலில் மிதந்திருக்க வேண்டும். ஆனால் அதற்கான அறிகுறி எதுவும் இல்லை. உடைந்த பாகங்கள் கிடைக்காத நிலையில் 2 -வது உலக போரின் போது அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் உருவாக்கப்பட்ட ரகசிய ஓடு தளத்தில் அது தரை இறக்கப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருக்க வேண்டும். சமீபத்தில் மலேசிய எதிர்க்கட்சி தலைவர் அன்வர் இப்ராகிம் ஓரின சேர்க்கை புகார் காரணமாக ஜெயிலில் அடைக்கப்பட்டார். அது பலிவாங்கும் நடவடிக்கையாக அந்த விமானத்தின் கேப்டன் ஷகாரி அகமது ஷா ( 53 ) விமானத்துடன் தற்கொலை செய்து இருக்கலாம். ஏனெனில் அவர் அன்வர் இப்ராகிமின் தீவிர ஆதரவாளர் ஆவார். 

சீனாவைச் சேர்ந்த விமான என்ஜீனீயர் மொகுத் கைரூல் அமிர் செலாமத் (29) என்பவர் பயணம் செய்துள்ளார். அவர் தொழில்நுட்பம் தெரிந்தவர். அவர் ஏதாவது தில்லு முல்லு செய்து விமானத்தில் நாசவேலையில் ஈடுபட்டிருக்காலம். அமெரிக்காவின் ரகசிய கடற்படை தளம் இந்திய பெருங்கடலின் டிகோ கார்சியா தீவில் உள்ளது. அமெரிக்கா அந்த விமானத்தை திசை திருப்பி அங்கு மறைத்து வைத்திருக்கலாம் என ரஷியாவின் உளவுத்துறை தெரிவித்துள்ளது. ஆனால் அதை அமெரிக்கா திட்டவட்டமாக மறுத்துள்ளது. " ரேடார் " கருவியில் தெரியாமல் இருக்கும் வகையில் விமானத்தை தாழ்வாக பறக்க வைத்து ஆப் கானிஸ்தானுக்கு தலிபான் தீவிரவாதிகள் கடத்தியிருக்கலாம். அமெரிக்காவில் நடந்த தாக்குதல் போன்று இந்தியாவில் அரங்கேற்ற விமானம் கடத்தப்பட்டிருக்காலம் என அந்நாட்டு முன்னாள் மந்திரி ஸ்ட்ரோப் தல்போத் தெரிவித்து இருந்தார். அதை இந்திய உளவுத் துறை மறுத்துள்ளது.

ஒரு வேளை மனிதர்கள் பற்றிய அறிய விண்கலன் மூலம் இந்த விமானத்தை வேற்று கிரகவாசிகள் கடத்தி சென்றிருக்கலாம். மலேசிய விமானம் பறந்த அதே வேளையில் இந்தயா - பாகிஸ்தான் வான்வெளி எல்லையில் சங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானமும் பறந்துள்ளது. அது மட்டும் அந்நாடுகளின் ரேடார் திரைகளில் மலேசிய விமானம் தெரியவில்லை அது தெரியாமல் இருக்க சிங்கப்பூர் விமானத்தில் பின்னாலேயே மலேசிய விமானமும் இயக்கப்பட்டிருக்கலாம் என்பன போன்ற 13 கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இருந்தும் மாயமான விமானம் குறித்து எந்தவித தகவலும் கிடைக்கவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்