முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நேருவால் சீனப் போரில் தோல்வி: ஆவணத்தால் சர்ச்சை

புதன்கிழமை, 19 மார்ச் 2014      உலகம்
Image Unavailable

 

புதுடெல்லி, மார்ச்20 - சீனாவுடன் நடந்த போரில் இந்தியாவுக்கு ஏறப்பட்ட படுதோல்விக்கு அப்போது பிரதமராகஇருந்த ஜவஹர்லால் நேருவின்  தவறான கொள்கைகள்தான் காரணம் என்று கூறும் ரகசிய ஆவணம் வெளியானதால் புதிய சர்ச்சை எழுந்துள்ளது.1962-ம் ஆண்டு இரு நாடுகளுக்கு இடையே நடைபெற்ற இந்தப் போர் தொடர்பாக ராணுவ  அதிகாரிகளால் சமர்ப்பிக்கப்பட்ட ஹேண்டர்சன் பரூக்ஸ் பகத் அறிக்கையின் சில பகுதிகளை போரின்போது டெல்லியில் தங்கி செய்தி சேகரித்த ஆஸ்திரேலிய நிருபர் நிவ்லி மேக்ஸ்வெல் இணையதளத்தில் வெளியி்ட்டுள்ளார்.

ஹென்டர்சன் புரீக்ஸ் அறிக்கை இந்திய அரசால் ரகசிய ஆவணமாக கருதப்பட்டு அதன் விவரங்கள் வெளியே கூறப்படாமல் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி அவர் வெளியி ட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:

யதார்த்த நிலையை கவனத்தில் கொள்ளாமல் அப்போதைய பிரதமர் நேருவும், ராணுவத் தளபதியும் எடுத்த முடிவுகள்தான் இந்திய-சீனப் போரில் இந்தியா படுதோல்வி அடைந்ததற்காகன முக்கிய காரணமாகும். சீனாவின் போர் யுக்திகளை இந்திய ராணவமும், புலனாய்வு அமைப்புகளும் கவனத்தில் கொள்ளாமல் முடிவு எடுத்துள்ளன. சீன ஆக்கிரமிப்பு பகுதியில் ராணுவ வலிமையை அதிகரிக்காமல் பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரிக்க இந்தியா எடுத்த முடிவே போர் மூள வகுத்தது. இந்திய ராணுவத்திடம் போதிய பலமில்லாத காரணத்தால் இதை நிறைவேற்ற முடியாது என தெரிந்திருந்தும் இந்தியா இந்த முடிவை எடுத்துள்ளது என்று நிவ்லி மேக்ஸ்வெல் குறிப்பிட்டுள்ளார். 

சீனப்போர் தொடர்பான ஹெண்டர்சன் புரூக்ஸ் அளித்த ரகசிய அறிக்கையை மத்திய அரசு வெளியிட வேண்டும் என்று பாஜக செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜவடேகர் வலியுறுத்தியுள்ளார். தேசப்பாதுகாப்பு தொடர்பான விவகாரத்தில் அப்போது ஆட்சி செய்த காங்கி்ரஸ் கட்சி சமரசம் செய்துள்ளது. தற்போதும் அதே நிலையை காங்கிரஸ் கடைபிடித்து வருகிறது என்று பிரகாஷ் குற்றம்சாட்டினார். 

                                                 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago