ஸ்பெக்ட்ரம் ஊழல் - 30 பேர் கொண்ட கூட்டுக்குழு அமைப்பு

No Image2 2

புதுடெல்லி,பிப்.25 - இந்தியா மட்டுமின்றி உலகையே உலுக்கிய ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக எதிர்க்கட்சிகள் கோரியபடி பாராளுமன்ற கூட்டுக்குழு நேற்று முறைப்படி அமைக்கப்பட்டது.
   இந்த குழுவில் 30 எம்பிக்கள் இடம்பெறுவார்கள். இந்த குழுவை அமைப்பதற்கான தீர்மானத்தை பாராளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சர் பிரணாப்முகர்ஜி தாக்கல் செய்தார். இதையடுத்து எம்பிக்கள் அடங்கிய கூட்டுக்குழு அமைக்கப்பட்டது.இந்த கூட்டுக்குழு ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக விசாரித்து பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடருக்குள் தனது அறிக்கையை தாக்கல் செய்யும். ஸ்பெக்ட்ரம் உரிமங்கள் ஒதுக்கீடு உள்ளிட்ட பல அம்சங்கள் குறித்து விசாரிக்கும். 1998 முதல் 2009 வரை பின்பற்றப்பட்ட தொலைதொடர்பு கொள்கை குறித்தும் இந்த குழு விசாரிக்கும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ