முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2ஜி வழக்கு: தயாளு அம்மாளுக்கு அமலாக்கப்பிரிவு சம்மன்

வியாழக்கிழமை, 20 மார்ச் 2014      ஊழல்
Image Unavailable

 

புதுடெல்லி,மார்ச்.21 - 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் துணைவியார் தயாளு அம்மாளுக்கு நேரில் ஆஜராகுமாறு அமலாக்கப்பரிவு சம்மன் அனுப்பியுள்ளது. இது இந்த வழக்கில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. 

நாட்டிற்கு ரூ.1.76 லட்சம் கோடி இழப்பை ஏற்படுத்திய ஊழல் 2ஜிஸ்பெக்ட்ரம் ஊழல். இந்த ஊழல் தொடர்பாக ஆரம்பத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா கைது செய்யப்பட்டார். அதன்பிறகு அவரது உதவியாளர்கள் உள்பட கிட்டத்தட்ட 15-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டார்கள். மேலும் கலைஞர் டி.வி.க்கு ரூ.200 கோடி கைமாறியது தொடர்பாக தி.மு.க. தலைவர் கருணாநிதி மகளும் எம்.பி.யுமான கனிமொழியும் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் 7 மாதங்களுக்கு கனிமொழி ஜாமீனில் விடுதலையானார். அதன் பிறகு ஒவ்வொருவராக ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். கலைஞர் டி.வி.யின் மற்றொரு பங்குதாரர் தயாளு அம்மாள். இவருக்கு கோர்ட்டில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் உடல்நிலையை காரணம் காட்டி அவர் ஆஜராகவில்லை. இதையடுத்து அதிகாரிகளே நேரில் விசாரணை நடத்திவிட்டு சென்றனர். இந்தநிலையில் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரசுடன் தனது கூட்டணியை முறித்துக்கொண்டது. இதையடுத்து தேர்தலில் காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் தனித்தே களம் காண்கிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையல் 2ஜிஸ்பெக்ட்ரம் வழக்கில் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் துணைவியார் தயாளு அம்மாளுக்கு நேரில் ஆஜராகுமாறு கோரி அமலாக்கப்பிரிவு சம்மன் அனுப்பியுள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்