முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டி-20 உலகக் கோப்பை: சூப்பர் 10 ல் நுழைவது யார்?

வியாழக்கிழமை, 20 மார்ச் 2014      விளையாட்டு
Image Unavailable

 

மிர்பூர், மார்ச்.21 - உலகக் கோப்பை 20 _20 ல் சூப்பர் 10 சுற்றுக்கான தகுதி சுற்று ஆட்டங்களில் ஏ பிரிவில் வங்கதேச அணி 2 ஆட்டங்களிலும் பி பிரிவில் அயர்லாந்து 2 ஆட்டங்களில் வெற்றி பெற்று தலா 4 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளன. 

இந்த அணிகளுக்கு அடுத்தபடியாக நேபாளம், ஆப்கானிஸ்தான், ஜிம்பாப்வே , ஹாலந்து ஆகிய 4 அணிகளும் தலா 1 வெற்றியுடன் 2 புள்ளிகள் பெற்றுள்ளன. 

ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஹாங்காங் ஆகிய அணிகள் 2ஆட்டத்திலும் தோல்வியை சந்தித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்து விட்டன. 

அனைத்து அணிகளுக்கும் இன்னும் தலா 1 ஆட்டம் எஞ்சியுள்ளது. வங்கதேசம், அயர்லாந்து அணிகள் முன்னிலை பெற்றுள்ளதால் அவர்கள் தங்களது கடைசி லீக் ஆட்டங்களில் வெற்றி பெற்று விட்டால் சூப்பர் 10 சுற்றில் எளிதாக நுழைந்து விடலாம். 

மாறாக தோல்வியை சந்தித்தால், ரன் ரேட் பிரச்சினை ஏற்படும். அந்த சூழ்நிலையில் ரன்ரேட் அதிகம் வைத்திருக்கும் அணி தான் சூப்பர் 10 சுற்றில் கால் பதிக்கும். 

இன்று நடைபெறும் ஆட்டங்களில் அயர்லாந்து _ ஹாலந்து , ஜிம்பாப்வே _ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகள் மோதுகின்றன. 

நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் _ நேபாளம், வங்கதேசம் _ ஹாங்காங் அணிகள் மோதின. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்