முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவுக்கு எதிராக ரஷ்யா பொருளாதார தடை

வெள்ளிக்கிழமை, 21 மார்ச் 2014      உலகம்
Image Unavailable

 

புரூசெல்ஸ், மார்ச். 22 - பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்காவுக்கு எதிராக ரஷ்யா பொருளாதார தடை விதித்து உள்ளது. 

உக்ரைனில் ஏற்பட்ட பொது மக்களின் கிளர்ச்சி காரணமாக ரஷ்யாவின் அனுதாபியான அதிபர் விக்டர் யனுகோவிச் தப்பியோடி விட்டார். அதைத் தொடர்ந்து அங்கு இடைக்கால அரசு ஏற்பட்டது. 

இதற்கிடையே உக்ரைனில் தன்னாட்சி பெற்ற கிரீமியா மாகாணம் ரஷ்யாவுடன் இணைய முடிவு செய்தது. அதையடுத்து நடந்த பொது வாக்கெடுப்பில் வெற்றியும் பெற்றது. 

அதைத் தொடர்ந்து கிரீமியா, ரஷ்யாவுடன் இணையும் வரைவு ஒப்பந்தத்தில் அதிபர் புதின் கையெழுத்திட்டார். 

ரஷ்யாவின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. 

இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் ஓபாமா ரஷ்யா மீது பொருளாதார தடை விதித்தார். அமெரிக்காவில் இருக்கும் ரஷ்ய அமைச்சர்கள், எம்.பி.க்கள் மற்றும் அவருக்கு விசுவாசமான உக்ரைன் அதிகாரிகள் என 21 பேரின் சொத்துக்களை முடக்கினார். 

மேலும், 11 பேரின் சொத்துக்களும் முடக்கப்பட்டன. இவர்கள் அனைவரும் அதிபர் புதினுக்கு நெருக்காமான ஜென்னாடி திம் ஜென்கோ, அர்காடி ரோடன் பர்க் மற்றும் பேரீஸ் ரோட்டன்பர்க் உள்ளிட்டோர் ஆவர். இவர்கள் அனைவரும் கோடீசுவரர்கள் மற்றும் வர்த்தகர்கள் என கூறப்படுகிறது. 

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரஷ்யாவும் அமெரிக்க அதிபர் ஓபாமாவுக்கு நெருக்கமானவர்களின் சொத்துக்களை முடக்கியுள்ளது. 

அவர்களில் கரோலின் அட்சின்சன், டேனியல், பெய்பர், பெஞ்சமின், ரோடல் மற்றும் செனட்டர்கள் மேரி, லேண்ட்ரியூ, ஜான் மெக்கைன், டேனியல் கோட்ஸ் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். 

இது குறித்து அதிபர் புதினின் செய்தித் தொடர்பாளர் கூறும்  போது, ஓபாமாவின் நடவடிக்கை ஏற்க தக்கதல்ல என்று கூறியுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்