முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பின்லேடனின் மறைவிடத்தை தெரிவித்தது தலிபான் தலைவர்தான்

செவ்வாய்க்கிழமை, 31 மே 2011      உலகம்
Image Unavailable

 

லண்டன், மே31 - அல் குவைதா தலைவர் ஒசாமா பின்லேடனின் மறைவிடம் குறித்து அமெரிக்காவுக்கு தகவல் கொடுத்தது தலிபான் இயக்கத்தின் கூட்டு நிறுவனர் முல்லா அப்துல் கனி பராதார் என்று லண்டனில் இருந்து வெளிவரும் சன்டே மிரர் தெரிவித்துள்ளது. அல்குவைதா தலைவரும் சர்வதேச பயங்கரவாதியுமான ஒசாமா பின்லேடன் கடந்த மாதம் 2-ம் தேதி பாகிஸ்தானில் உள்ள அபோதாபாத் என்ற இடத்தில் அமெரிக்க அதிரடிப்படையினரால்  சுட்டுக்கொல்லப்பட்டார்.

கடந்த 10 ஆண்டுகளாக அமெரிக்காவுக்கு தெரியாமல் பாகிஸ்தானில் மறைந்திருந்த ஒசாமாவை காட்டிக்கொடுத்தது தலிபான் இயக்கத்தின் கூட்டு நிறுவனர் முல்லா அப்துல் கனி பரார் என்று லண்டனில் இருந்து வெளியாகும் சன்டே மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் உள்ள தங்களது கோட்டை பகுதியிலிருந்து அமெரிக்க படைகளை வாபஸ் பெற வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் ஒசாமாவின் மறைவிடத்தை முல்லா அப்துல்  அமெரிக்க அதிகாரிகளுக்கு காட்டிக்கொடுத்ததாக அந்த தகவல் தெரிவிக்கிறது.

ஒசாமாவுக்கு மிகவும் நெருக்கமானவராக முல்லா அப்துல் இருந்து வந்தார் என்றும் அந்த செய்தித்தாள் தெரிவித்துள்ளது.

முல்லா அப்துல்லும் அவரது முக்கிய சகாக்களும் பின்லேடன் பற்றி தகவல்களை அமெரிக்காவுக்கு  அளித்து வந்தனர் என்றும் கூறப்படுகிறது.

அமெரிக்க உளவுத்துறைக்கு நம்பகமான தகவல்களை இவர்கள் கொடுத்து வந்துள்ளனர். இந்த தகவல்களை அமெரிக்காவின் நம்பகமான அதிகாரி ஒருவரிடம் முல்லா அப்துல் அளித்தார் என்றும் அதன் அடிப்படையில்தான் பின்லேடன் இருக்கும் இடத்தை அமெரிக்க அதிகாரிகளால் கண்டுபிடிக்க முடிந்தது என்றும் அந்த தகவல்கள் கூறுகின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்