முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கருணாநிதியை நாட்டைவிட்டே வெளியேற்றும் காலம் வந்துவிட்டது

செவ்வாய்க்கிழமை, 31 மே 2011      தமிழகம்
Image Unavailable

 

விருதுநகர், மே.31 - கருணாநிதியை கோட்டையை விட்டு வெளியேற்றி இனி நாட்டை விட்டே வெளியேற்றும் காலம் வந்துவிட்டது என சாத்தூரில் சட்டமன்ற அலுவலகத்தை திறந்து வைத்து தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.

சாத்தூர் சட்டமன்ற அலுவலகத்தை சாத்தூர் சட்டமன்ற உறுப்பினரும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் திறந்து வைத்தார். சட்டமன்ற அலுவலகத்தை திறந்து வைத்து பேசுகையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வாக்களித்த சாத்தூர் தொகுதி மக்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். தமிழக முதல்வர் மீது நீங்கள் கொண்டுள்ள நம்பிக்கையை நன்கு அறிந்துள்ளார். ஆகையால் உங்கள் தேவைகள் குறைகள் அனைத்தும் தமிழக முதல்வரால் நிறைவேற்றப்படும். கடந்த மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியால் தமிழகம் சீரழிந்து போய் உள்ளது. கருணாநிதியை கோட்டையை விட்டு வெளியேற்றி இனி நாட்டை விட்டே வெளியேற்றும் காலம் வந்துவிட்டது.  தமிழகத்தை சீர்படுத்த தமிழக முதல்வர் பெரும் முயற்சி கொண்டு இரவு பகல் பாராது சிந்தித்து பல நல்ல திட்டங்களை தீட்டிவருகிறார். தமிழக முதல்வர் ஜெயலலிதா ஒருவரே தமிழக மக்களுக்காக உழைக்கும் உன்னத தலைவர். தமிழக மக்களே தனது குடும்பமாக நினைப்பவர். அதனால் தான் தினந்தோறும் அமைச்சரவை ஆலோசனைக்கூட்டம் நடத்தி வருகிறார். கடந்த மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியால் மக்கள் சொல்லமுடியாத துன்பங்களுக்கு உள்ளாக்கப்பட்டனர். ஆனால் தமிழக முதல்வர் ஜெயலலிதா தமிழக மக்களின் முகத்தில் இனி சிரிப்பை மட்டுமே பார்க்கவேண்டுமென கூறி திட்டங்களை தீட்டி வருகிறார். தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ள வாக்குறுதிகள் அனைத்தையும் தமிழக முதல்வர் சிறப்பான முறையில் நிறைவேற்றுவார். இவ்வாறு அவர் பேசினார்.

சட்டமன்ற அலுவலகம் திறப்பு விழாவில் சாத்தூர் கழக தொகுதிச் செயலாளர் சேதுராமன், நகரச்செயலாளர் வாசன், நகர அம்மா பேரவை இணைச்செயலாளர் முனீஸ், நகர மாணவரணிச் செயலாளர் செல்வகணேஷ், இளைஞர் இளம்பெண் பாசறை மாவட்ட செயலாளர் தினேஷ்பாபு, எம்.ஜி.ஆர் மன்ற மாவட்ட இணைச்செயலாளர் கே.கலாநிதி, ஒன்றிய எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் அருள் என்ற அதியமான்,  எம்.ஜி.ஆர் இளைஞரணி மாவட்ட இணைச்செயலாளர் கண்ணன், விருதுநகர் நகரப்பொருளாளர் முகமது நைனார், அமைப்பு சாரா ஓட்டுனர் அணி மாவட்ட துணைச்செயலாளர் தர்மா, முன்னாள் மாவட்ட செயலாளர் விநாயக மூர்த்தி, மாவட்ட மகளிரணி செயலாளர் கெளரி, ஸ்ரீவில்லி. தொகுதிச்செயலாளர் சிந்து எம்.முருகன், நக்கமங்கலம் கிளைக்கழக செயலாளர் காளிமுத்து, மாவட்ட வழக்கறிஞர் அணி இணைச்செயலாளர் திலகராஜன், ஸ்ரீவில்லி. 30 வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலர் ஏ.மகேஸ்வரன், பொன்னுச்சாமி, வெங்கடசாமி நாயக்கர் உள்ளிட்ட அ.தி.மு.க. மற்றும் கூட்டணிக்கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்