முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய அணி மே.இ. தீவு அணியுடன் இன்று மோதல்

சனிக்கிழமை, 22 மார்ச் 2014      விளையாட்டு
Image Unavailable

 

டாக்கா, மார்ச். 23 - 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 2_வது ஆட்டத்தில் மேற்கு இந்தியத் தீவுகள் அணியுடன் இன்று மோத இருக்கிறது. 

இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் மோதியது. இதில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. 

எனவே மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக 2_வது வெற்றி பெறுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் கிளம்பியுள்ளது. 

இந்தியா மற்றும் மே.இ.தீவுகள் அணிகளுக்கு இடையேயான இந்தஆட்டம் இன்று இரவு 7 மணிக்கு நடக்கிறது. 

பாகிஸ்தானை வீழ்த்திய நம்பிக்கையில் இருக்கும் இந்தியா 2_வது வெற்றியைபெறும் ஆர்வத்தில் இருக்கிறது. பேட்டிங், பௌலிங்கில் இந்தியா சமபலத்துடன் காணப்படுகிறது. 

நடப்பு சாம்பியனான மே.இ.தீவு அணி இந்தியாவுக்கு சவால் விடக் கூடியது. அந்த அணியில்தலைசிறந்த வீரர்கள் உள்ளனர். 

பாகிஸ்தான் அணி தனது 2_வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை இன்று எதிர்கொள்கிறது. முதல் ஆட்டத்தில் தோற்றதால் பாக். இதில் கடுமையாக போராடும். 

இந்தியா மற்றும் மே.இ.தீவு அணிகளுக்கு இடையேயான இந்த ஆட்டம் இரவு 7 மணிக்கு நடைபெற இருக்கிறது. இந்த ஆட்டம் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவிசனில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்