முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அக்னி நட்சத்திரமும் முடிந்தது - மழை துவங்கியது

செவ்வாய்க்கிழமை, 31 மே 2011      தமிழகம்
Image Unavailable

 

மதுரை,மே.31 - மக்களை வாட்டி வைத்த அக்னி நட்சத்திரம் முடிவடைந்த நிலையில் நேற்று மதுரையில் மழை பெய்து மக்களை குளிர்வித்தது. தமிழகம் முழுவதும் கோடை வெயில் மக்களை வாட்டி வைத்து வந்தது. மக்கள் பகல் நேரங்களில் வெளியே வரமுடியாத அளவிற்கு வெப்பம் அதிகமாக இருந்தது. இந்த நிலையில அக்னி நடசத்திரம் துவங்கியது. ஆனால் அக்னி நட்சத்திரம் துவங்கிய அன்றே மழை பெய்தது. இதனால் மக்கள் தொடர்ந்து மழைபெய்யும் அக்னி நட்சத்திரத்தில் இருந்து தப்பித்து விடலாம் என்று  எண்ணினர். ஆனால் வருண பகவான் ஒருநாள் மட்டும் கருணை காட்டி விட்டு, ஓடி ஒளிந்து கொண்டார். அக்னிநட்சத்திர வெப்பத்தில் சிக்கி மக்கள் படாதபாடுபட்டனர். இளநீர் கடைகளிலும், குளிர்பான கடைகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. வெப்பம் தாங்காமல் குழந்தைகளுக்கு வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டு கஷ்டப்பட்டனர்.

   இந்த நிலையில் நேற்று முன்தினத்துடன் அக்னி நட்சத்திரம் முடிவடைந்தது. அக்னி நட்சத்திரம் விடைபெற்றுக்கொள்ளவும், வருண பகவான் மீண்டும் கருணை காட்ட துவங்கினார். நேற்று இரவு சுமார் ஒரு மணி நேரம் மதுரையில் மழை பெய்தது. இதனால் வெயிலில் வாட்டி வதங்கிய மக்கள் குளிர்ந்தனர். தொடர்ந்து தென்மேற்கு பருவே மழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago