முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உக்ரைன் பிரச்சினைக்கு பேச்சு மூலம் தீர்வு: அமெரிக்கா

ஞாயிற்றுக்கிழமை, 23 மார்ச் 2014      உலகம்
Image Unavailable

 

வாஷிங்டன், மார்ச் 24 - உக்ரைன் பிரச்சினைக்கு பேச்சு வார்த்தை மற்றும் அரசியல் ராஜதந்திரம் மூலம் தீர்வு காணப்படவேண்டும் என்று அமெரிக்காவின் தேசிய பாது காப்பு ஆலோசகர் சூசன் ரைஸ் கூறினார். 

இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறுகை யில், “கிரீமியா ஆக்கிரமித்து, அதை தனது நாட்டுடன் இணைத்துக் கொண்டதற்கும், உக்ரைன் தொடர்பாக மேற்கொண்டு வரும் ஆத்திரமூட்டும் நடவடிக்கை களுக்கும் நமது எதிர்ப்பை ரஷியாவுக்கு தெளிவாக கூறி விட்டோம். 

அங்குள்ள ரஷ்யப் படைகள் வாபஸ் பெறப்படவேண்டும். பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரம் மூலம் இப்பிரச்சினைக்கு தீர்வு காணப் படவேண்டும். இதனை ரஷ்யா ஏற்கும் என நம்புகிறோம். தொடர்ந்து இதற்கான முயற்சி களில் ஈடுபடுவோம். 

இந்த விவகாரத்தில் நானும், அதிபர் ஒபாமா, வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி, பாது காப்பு அமைச்சர் ஹேகல் உள்ளிட்ட தலைவர்களும் முக்கிய பிராந்திய மற்றும் சர்வதேச கூட்டணி மற்றும் நட்பு நாடுகளை தொடர்ந்து தொடர்பு கொண்டு வருகிறோம். அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுடன், ஐரோப்பாவுக்கு வெளியில் உள்ள பல்வேறு நாடுகளும் ரஷ்யா மீது பொரு ளாதாரத் தடைகள் விதிக்க முன்வந்துள்ளன.” என்றார் சூசன் ரைஸ். 

இதனிடையே கிரைமியாவை ரஷ்ய கூட்டமைப்புடன் இணைக்கும் சட்டத்தில் ரஷ்ய அதிபர் புதின் வெள்ளிக்கிழமை கையெழுத்திட்டு ஒப்புதல் வழங்கினார். மாஸ்கோவில் பொதுமக்கள் பட்டாசு வெடித்து இந்நிகழ்ச்சியை கொண்டாடினர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்