முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விமானத்தை தேடுவதில் ஏற்பட்டுள்ள நம்பிக்கை பலன் தருமா?

ஞாயிற்றுக்கிழமை, 23 மார்ச் 2014      உலகம்
Image Unavailable

 

கோலாலம்பூர், மாரச் 24 - பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த செயற்கைக்கோளின் புதிய படங்கள் மூலம், மாயமான மலேசிய விமானத்தைத் தேடும் பணியில் நம்பிக்கை வலுவாகியுள்ளது. 

ஆஸ்திரேலியா அருகே தெற்கு இந்தியப் பெருங்கடலில், விமானத்தின் பாகங்கள் என சந்தேகிக்கப்படும் உடைந்த துண்டுகள் மிதப்பது போல் தெரிவது, நம்பிக்கையைக் கூட்டுவதாக ஆஸ்திரேலிய அதிகாரிகள் தெரிவித்தனர். 

புதிய செயற்கைக்கோள் படங்களை ஆஸ்திரேலியாவுக்கு பிரான்ஸ் அனுப்பியுள்ளது. இதைத் தொடர்ந்து, குறிப்பிட்ட தெற்கு இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளதாக மலேசிய போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

அதேவேளையில், நான்காவது நாளாக தேடுதல் நடவடிக்கை தொடர்ந்தபோதிலும், உறுதியான ஆதாரங்கள் எதுவும் கிட்டவில்லை என்று ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது. 

எனினும், பிரான்ஸ் செயற்கைக்கோள் மூலம் கிடைத்துள்ள புதிய படங்களால் நம்பிக்கை கூடியுள்ளதாக அவர்கள் தெரிவித்தன. 

முன்னதாக, தெற்கு இந்தியப் பெருங்கடல் பகுதியில் உடைந்த துண்டுகள் போல் காட்சியளிக்கும் செயற்கைக்கோள் படங்களை ஆஸ்திரேலியாவும், சீனாவும் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. 

இதனிடையே, மாயமான விமானத்தைத் தேடும் நடவடிக்கையை மற்ற நாடுகளுடன் இந்தியாவும் தொடர்ந்துள்ளது. 

முன்னதாக, கடந்த மார்ச் 8-ம் தேதி 5 இந்தியர்கள் உள்பட 239 பேருடன் கோலாலம்பூரில் இருந்து பெய்ஜிங் சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் மாயமானது. 15 நாள்கள் ஆகியும் இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை. 

விமானத்தின் கருப்புப் பெட்டி பேட்டரிகள் 30 நாள்கள் மட்டுமே இயங்கும். அதன்பின் பேட்டரிகள் செயலிழந்து சிக்னல் கிடைக்காது. எனவே, இன்னும் 15 நாள்களுக்குள் கருப்புப் பெட்டியை கண்டுபிடிக்க வேண்டும், இல்லையெனில் ஆழ்கடலில் அதனை தேடுவது மிகவும் கடினம் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago