முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.நா உதவி குழுவில் இந்திய மருத்துவர்கள்

ஞாயிற்றுக்கிழமை, 23 மார்ச் 2014      உலகம்
Image Unavailable

 

நியூயார்க், மார்ச் 24 - தொடர்ச்சியான வன்முறை மற்றும் கலவரம் நிகழ்ந்து வரும் தெற்கு சூடான் நாட்டில், ஐ.நா மருத்துவ உதவிக் குழுவில் இந்தியாவைச் சேர்ந்த மருத்துவர்கள் பங்கேற்று பணிபுரிந்து வருகின்றனர்.

அப்பர் நிவே மாகாணத்தின் கலவர பாதிப்பு நிறைந்த மலாகல் பகுதியில் உள்ள ஐ.நா. முகாமில் 80க்கும் மேற்பட்ட குழந்தைகள் பிறந்துள்ளன. இதில் 41 குழந்தைகள் அங்குள்ள இந்திய மருத்துவமனையில் பிறந்துள்ளன.மலாகல் ஐ.நா. முகாமில் உள்ள இந்திய ராணுவ மருத்துவமனையில் கடந்த டிசம்பர் 23-ஆம் தேதி முதல் 976 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. 134க்கும் மேற்பட்ட முக்கிய அறுவை சிகிச்சைகள் மற்றும் பிரசவங்கள் இந்திய மருத்துவர்களின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்