முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தலிபான் தாக்குதல்: அமெரிக்க ஐ.நா. கண்டனம்

ஞாயிற்றுக்கிழமை, 23 மார்ச் 2014      உலகம்
Image Unavailable

 

வாஷிங்டன், மார்ச் 24 - ஆப்கானிஷ்தானில் தலிபான்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 9 பேர் கொல்லப்பட்டதற்கு அமெரிக்காவும், ஐ.நா.வும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்க வெளியுரவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி செய்தியாளர்களிடம் கூறியதாவது: வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலுக்கு ஆப்கானிஸ்தான் மக்கள் தயாராகி வருகின்றனர். இந்நிலையில் 'நவ்ரூஸ்' புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த வேளையில் அவர்கள் மீதும், வெளிநாட்டினர் மீதும் நடத்தப்பட்ட இத்தகைய தாக்குதல் கண்டனத்துக்குறியது. இத்தகைய தாக்குதல் மூலம் தீவிரவாதிகள் மனித உயிரை மதிக்காததும், வரவிருக்கும் தேர்தல் மீது அவர்கள் கொண்டுள்ள பயமும் தெரியவருகிறது. 

இந்த தாக்குதலில் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த பத்திரிக்கையாளரும், அவரது மனைவி மற்றும் 2 குழந்தைகளும் கொல்லப்பட்டனர். அவர்கள் உள்பட இந்தத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம். வளமான, நிலையான, ஜனநாயத்துடனான, ஆப்கானிஸ்தான் அமைவதற்கு அந்நாட்டு மக்கள் மற்றும் அரசுடன் எப்போதும் உறுதுணையாக இருப்போம் என்று ஜென் சாகி கூறினார்.

தெனிடையே, தலிபான் தீவிரவாதிகள் ஆப்கானிஸ்தானில் நடத்திய தாக்குதலுக்கு ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூனும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த வாரத்தில் ஆப்கானிஸ்தானில் நிகழ்த்தப்பட்ட பல்வேறு தாக்குதல்களில் 50க்கும் மேற்பட்ட பொது மக்கள் கொல்லப்பட்டதற்கு பொதுச் செயலாளர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார், என்று கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்