முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகா பள்ளிக்கல் வழக்கில் இழப்பீடு

திங்கட்கிழமை, 24 மார்ச் 2014      விளையாட்டு
Image Unavailable

 

சென்னை, மார்ச் 25 - சென்னையை சேர்ந்த பிரபல் 'ஸ்குவாஷ்' விளையாட்டு வீராங்கனை தீபிகா பள்ளிக்கல்(23). இந்தியாவின் உயரிய கவுரவமான அர்ஜுனா மற்றும் பத்மஸ்ரீ விருதுகளை பெற்றுள்ள இவர், ஸ்குவாஷ் விளையாட்டில் தேசிய அளவில் 'நம்பர் ஒன்' வீராங்கனையாகவும், சர்வதேச அளவில் 11_வது இடத்திலும் உள்ளார்.

போட்டி ஒன்றில் பங்கேற்க நெதர்லாந்து நாட்டுக்கு சென்றிருந்த தீபிகா பள்ளிக்கல், அங்குள்ள ராட்டர்டம் நகரின் ஒரு ஓட்டலில் தங்கியிருந்தார். ஓட்டல் கட்டணத்தை செலுத்துவதற்காக தனது 'டெபிட் கார்ட்'_ஐ அவர் தந்த போது, அவரது கணக்கில் பணம் இல்லை என்று ஓட்டல் ஊழியர்கள் தெரிவித்தனர்.

ஓட்டல் கட்டணத் தொகையை காட்டிலும் தனது வங்கிக் கணக்கில் 10 மடங்கு அதிக தொகையை சேமித்து வைத்திருந்த தீபிகா, ஓட்டல் ஊழியர்களின் பதிலை கேட்டு அதிர்ச்ச்சியடைந்தார்.

இது தொடர்பாக வங்கி அதிகாரிகளிடம் அவர் கேட்டபோது தொழில்நுட்ப குறைபாட்டை அவர்கள் காரணம் காட்டினர்.

இச்சம்பவம் நிகழ்ந்த சில நாட்கள் கழித்து, இந்திய அரசின் விளையாட்டுத் துறை அவருக்கு ஒரு லட்சம் ரூபாயை பரிசாக வழங்கியது. அந்த காசோலையை வங்கியில் போட்ட தீபிகா, அந்த காசோலைக்கான தொகை தனது கணக்கில் பற்றாகி விட்டதா? என்று சரிபார்த்த போது, அந்த காசோலை 'ரிட்டர்ன்' ஆகி விட்டதாக அந்த வங்கியின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனால் கொதிப்படைந்த தீபிகா, ஒழுங்கான சேவை வழங்க தவறியதால் தனக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு 'ஆக்ஸிஸ் வங்கி'யின் சென்னை கிளை பத்து லட்சம் ரூபாய் இழப்பீடு தர வேண்டும் என்று சென்னை நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நுகர்வோர் கோர்ட் நடுவர், 'மனுதாரருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு சம்பந்தப்பட்ட வங்கி 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்' என்று உத்தரவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்