முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்ரீநிவாசன் ராஜினாமா செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு

செவ்வாய்க்கிழமை, 25 மார்ச் 2014      விளையாட்டு
Image Unavailable

 

புதுடெல்லி,மார்ச்.26 - ஐபிஎல் சூதாட்ட சர்ச்சை குறித்து நேர்மையான, நியாயமான விசாரணை நடக்க வேண்டும் என்றால் பிசிசிஐ தலைவர் பதவியை என்.ஸ்ரீநிவாசன் ராஜினாமா செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

இதனால் ஸ்ரீநிவாசனுக்கு புதிய நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஐ.பி.எல். சூதாட்ட புகார் தொடர்பான நீதிபதி முகுல் முத்கல் அறிக்கை மீதான விசாரணை நேற்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது.

விசாரணையின் போது, ஐபிஎல் சூதாட்ட சர்ச்சை குறித்து நேர்மையான, நியாயமான விசாரணை நடக்க வேண்டும் என்றால் பிசிசிஐ தலைவர் பதவியை ஸ்ரீநிவாசன் ராஜினாமா செய்ய வேண்டும் என நீதிபதி ஏ.கே.பட்நாயக் தெரிவித்தார்.

அப்போது குறிக்கிட்ட ஸ்ரீநிவாசன் தரப்பு வழக்கறிஞர் சி.எ.சுந்தரத்திடம் அறிக்கையை உங்களிடம் அளிக்கிறோம், அதனை முழுமையாக ஆராய்ந்து பாருங்கள். ஸ்ரீநிவாசனின் வழக்கறிஞராக இல்லாமல் உங்கள் நிலைப்பாட்டை தெரிவியுங்கள் என்றார்.

மேலும் அவர் கூறுகையில், "முதல் அறிக்கை சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதிகள் இருவர் கொண்ட விசாரணைக் குழு அளித்தது. இரண்டாவது அறிக்கை முகுல் முத்கல் குழுவின் அறிக்கை.

இரண்டு அறிக்கைக்கும் முரண் இருக்கிறது. இதனை வைத்து, அறிக்கையில் சில குளறுபடிகள் செய்யப்பட்டுள்ளன என்று கூறினால், அதன் விளைவுகள் என்னவாக இருக்கும்? என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்