முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சோச்சி நகரில் நடைபெறவிருந்த ஜி-8 மாநாடு ரத்து

செவ்வாய்க்கிழமை, 25 மார்ச் 2014      உலகம்
Image Unavailable

 

ஹேக்,மார்ச்.26 - உக்ரைன் சர்ச்சை காரணமாக ரஷ்யாவின் சோச்சி நகரில் வரும் ஜூன் மாதத்தில் நடைபெறுவதாக இருந்த ஜி-8 மாநாடு ரத்து செய்யப்படுவதாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அறிவித்துள்ளன.

அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் கடும் எதிர்ப்பையும் மீறி கிரிமியாவை தன்னுடன் இணைத்துக் கொண்டது ரஷ்யா.

இந்நிலையில்,நேற்றுமுன்தினம் ஹேக் நகரில் அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஜெர்மணி, இத்தாலி, பிரான்ஸ், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தினர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், ஜி-8 கூட்டமைப்பில் இருந்து ரஷ்யாவை நீக்குவது என்றும், சோச்சி நகரில் ஜி-8 மாநாட்டை நடத்துவதில்லை என்றும் முடிவெடுக்கப்பட்டது. மேலும், சோச்சி நகருக்கு பதிலாக பிரஸல்ஸ் நகரில் மாநாட்டை நடத்துவது என்றும் முடிவு எடுக்கப்பட்டது.

கிரிமியா இணைப்புக்கு கண்டனம் தெரிவித்த அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ரஷ்யாவுக்கு கடும் எச்சரிக்கை விடுத்திருந்தன. இந்நிலையில், ஜி-8 மாநாடு ரத்து செய்யப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்