முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தானில் பஸ் உருண்டு விழுந்து 10 பேர் பலி

செவ்வாய்க்கிழமை, 25 மார்ச் 2014      உலகம்
Image Unavailable

 

இஸ்லாமாபாத், மார்ச் 26 - பாகிஸ்தானில் வடகிழக்கே மலையில் இருந்து கிழே இறங்கிய பஸ் ஒன்று பள்ளத்தாக்கில் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் 2 குழந்தைகள் உள்பட 10 பேர் பலியானார்கள்.

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்துக்கு வட கிழக்கே 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மலை நகரான முர்ரி சுற்றுலா தலமாக விளங்குகிறது. இங்கு ஏராளமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். முர்ரியில் இருந்து ராவல்பிண்டிக்கு பயணிகளுடன் ஒர் பஸ் கிளம்பியது. அப்போது அப்பகுதியில் மழை பெய்து கொண்டிருந்தது. மலையில் இருந்து கிழே இறங்கிய பஸ், ஒரு சாலை திருப்பத்தில் திரும்பியபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் உருண்டது. இந்த விபத்தில் 2 குழந்தைகள் மற்றும் 2 பெண்கள் உள்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும், 8 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். தற்போது மற்றவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது என்று முர்ரி போலீஸ் நிலைய அதிகாரி முடாசர் உசைன் நிருபர்களிடம் கூறினார். தென்மேற்கு பாகிஸ்தானில் பெட்ரோல் டேங்கர் லாரியுடன் 2 பயணிகள் பஸ் மோதி வெடித்து சிதரியதில் 35 பேர் பலியானார்கள்.

பாகிஸ்தானில் லாரி, பஸ் டிரைவர்கள் வேகமாகவும் அஜாகிரதையாகவும் ஓட்டுவதால் விபத்துகள் அதிகமாக நடக்கின்றன என்று கூறுகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்