முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சன் ரைசர்ஸ் அணிக்கு ஷிகார் தவான் கேப்டன்

செவ்வாய்க்கிழமை, 25 மார்ச் 2014      விளையாட்டு
Image Unavailable

 

புதுடெல்லி, மார்ச். 26 - ஐ.பி.எல் . போட்டியில் பங்கேற்கும் முக்கிய அணிகளில் ஒன்றான சன் ரைசர்ஸ் அணியின் கேப்டனாக இந்திய அணியின் துவக்க வீரரான ஷிகார் தவான் நியமிக்கப்பட்டு உள்ளார். 

ஐ.பி.எல். 7_வது சீசன் போட்டி அடுத்த மாதம் 16_ம் தேதி ஐக்கிய அரபு எமிரேட்சில் துவங்குகிறது. இதற்காக பிரமாண்ட ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. 

இந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், சன் ரைசர்ஸ் ஐதராபாத், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்கின்றன. 

இந்நிலையில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டானக ஷிகார் தவான், துணைக் கேப்டனாக மே.இ.தீவின் டேரன் சம்மி ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர். தவான் கடந்த சீசனில் 10 ஆட்டங்களில் 311 ரன் குவித்து இருக்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்